ரூ.5,500 கோடி முதலீட்டில் 100 ஷோரூம்கள் திறந்து இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை விரிவாக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது ஜோஸ் ஆலுக்காஸ்.
இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில்,
”இந்தியாவிலேயே, தங்க விற்பனைத் துறையில் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ரூ.5,500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: (26.04.2023): தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையகமான ஜோஸ் ஆலுக்காஸ், 5.500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஷோரூம்களைத் திறப்பது என்ற மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை அறிவிக்கிறது.
இது, இந்தியாவில் சில்லறை தங்க நகை விற்பனைத் துறையில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு மற்றும் விரிவாக்கத் திட்டமாகும். ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், உலகளாவிய வளர்ச்சியையும் விற்பனைச் சந்தையையும் எதிர்நோக்கியுள்ளது. கேரள மாநிலத்தின் தங்கத் தலைநகரான திருச்சூரில் தொடங்கப்பட்டு, தங்க நகை விற்பனைத் துறையில் முன்னோடி நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், GCC நாடுகளிலும் விற்பனையகங்களைத் திறந்த முதல் மற்றும் முன்னோடி நிறுவனமாகவும் விளங்குகிறது.
தங்கத்துக்காகவே பிறந்தவர்!
தங்க நகை செய்யும் ஆசாரிகளிடம் ஆர்டர் கொடுத்து தங்க நகைகள் செய்து வாங்கிய காலத்தில், ஒரு மனிதர் வித்தியாசமாகச் சிந்தித்து இந்தியாவில் தங்க நகை சில்லறை விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அவர் பெயர் ஜோஸ் ஆலுக்காஸ். ஆம், அவர்தான் நாட்டிலேயே முதன்முறையாக நகை ஷோரூம்களைத் திறந்து நூற்றுக்கணக்கான கிலோ தங்கத்தில் அணிவதற்குத் தயாரான ஆயிரக்கணக்கான டிசைன்களில் விற்பனை செய்தார். அதன்மூலம், ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரும்கள் தங்கத்துக்கான சூப்பர்மார்க்கெட்டுகளாக மக்களால் அறியப்பட வேண்டும் என்ற அளவுக்கு அவரது தேர்வுகள் மிகப்பெரியதாக இருந்தன.
ஜோஸ் ஆலுக்காஸுக்குள் இருந்த புரட்சியாளர் இன்னும் தீவிரமாக யோசித்தார். கேரளாவுக்கு வெளியே, யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில் முதன்முறையாக தங்க நகை விற்பனையகத்தைத் திறந்ததுபோல் 916 முத்திரையிட்ட தங்க நகைகளை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த நகைகள், மக்களை வெகுவாகக் கவர்ந்தன. இதன்மூலம், 916 முத்திரையிட்ட நகைகளைக் கண்டுபிடித்த முதல் தங்க நகை விற்பனையாளர் என்ற சாதனையுடன், தென்னிந்தியாவில் தங்க நகைகளின் தரத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார் ஜோஸ் ஆலுக்காஸ்.
இந்தியாவில் விற்கப்படும் தங்க நகைகளில் BIS 916 தர முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தபோது. ஜோஸ் ஆலுக்காஸ் அதற்காக பிரசாரம் மேற்கொண்டார். தற்போது. தங்க நகைகளுக்கான HUID என்ற சான்றிதழையும் அவர் பெருமையுடன் வழங்குகிறார்.
இன்று, தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளை DG கோல்டு என்ற முறையில் ஆன்லைன் மூலமும் வாங்கக்கூடிய வகையில் நகை விற்பனை மேம்படுத்தப்பட்டுள்ளது.
தூய்மை கொடுத்த தைரியம்
ஜோஸ் ஆலுக்காஸ் நகைகள், அதன் எடைக்குச் சமமான உண்மையான மதிப்பைக் கொண்டவை என மக்கள் தைரியமாக நம்புவதால்தான், தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்.
பிரகாசம் நிறைந்த பயணம்
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், மாபெரும் வளர்ச்சியை நோக்கி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. பிரத்யேக மற்றும் புதுமையான வடிவிலான நகைகள். கைதேர்ந்த கைவினைகளால் வடிவமைக்கப்பட்டு தொழிலகத்தில் உருவாக்கப்பட்ட நகைகள். நியாயமான விலை. தரத்தில் சமரசமில்லாத உறுதிப்பாடு. நுகர்வோரின் தேவை அறிந்த திட்டங்கள். இவை அனைத்தும்தான் ஜோஸ் ஆலுக்காஸின் வாடிக்கையாளர்களை தலைமுறை தலைமுறையாக நம்பவைத்துள்ளன.
50 ஷோரூம்கள் மூலம் மட்டுமே ரூ.9,000 கோடி விற்பனை வருவாயை ஈட்டுவதன் மூலம், ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் வெற்றிக்கொடி எப்போதும் உச்சத்தில் பறந்துகொண்டே இருக்கிறது. அதாவது, மிக அதிக எண்ணிக்கையில் ஷோரூம்களைக் கொண்ட நிறுவனங்கள்கூட நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் இருக்கிறது.
ஆய்வு மேற்கொண்டு, மக்கள் விரும்பக்கூடிய நவீன காலத்துக்கு ஏற்ற டிசைன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பதால்தான் தங்க நகை விற்பனையில் ஜோஸ் ஆலுக்காஸ் நாட்டிலேயே முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது.
ஒளிமயமான எதிர்கால சாத்தியக்கூறுகள்
2024ல், திறமை, புதுமை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பணப் பலன்கள் ஆகியவற்றின் மூலம் 60 ஆண்டுகாலமாக வெற்றியை ருசித்து வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.
ரூ.5,500 கோடி முதலீட்டில் 100 ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன - இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை விரிவாக்கத் திட்டம்!
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், திட்டமிட்ட ஒரு பாதையை உருவாக்கி, அதன்மூலம் எளிமையானதும் விரைவானதுமான விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது. முதலில், பல தென்னிந்திய நகரங்களில் பல ஷோரூம்கள், அதைத் தொடர்ந்து, இந்தியாவின் மற்ற முக்கியப் பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டது. இப்போது. Gcc / ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் ஷோரூம்களைத் திறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே டிசைனர் பிராண்டாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படும். அதனால், ஒரு சர்வதேச வடிவமைப்புக் கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் முன்னணி நகை வடிவமைப்பாளர்களில் ஒருவருடன் கூட்டு சேர்ந்து புதிய வடிவிலான நகைகள் வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச நகை வடிமைப்பாளர்களுடன் கூட்டு சேர திட்டமிடப்பட்டுள்ளது. உலகளாவிய விரிவாக்கம் என்பது. இந்தியர்கள் வசிக்கும் நாடுகளில் மட்டுமல்லாமல், உலகின் மிக முக்கிய நகரங்களிலும்கூட ஷோரூம்கள் திறக்கப்படும் என்ற அளவில் மிகப்பெரியதாக இருக்கும் என்கிறார் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ்.
எங்களுடைய நம்பமுடியாத பங்குதாரர்கள்
ஜோஸ் ஆலுக்காஸின் வெற்றிக்குப் பலரும் பங்களித்துள்ளனர். ”எங்களுடைய நிர்வாகக் குழு, மதிப்புமிக்க பணியாளர்கள், இன்று, எங்கள் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக, பிரபல நடிகர் ஆர். மாதவன் அவர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட உள்ளார்” என்றார் ஜோஸ் ஆலுக்காஸ்.
”சில்லறை நகை விற்பனைத் துறையில் 60 ஆண்டுகால நீண்ட பாரம்பரியம், ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு புகழ்மிக்க ஓர் இடத்தை அளித்துள்ளது. ஜோஸ் ஆலுக்காஸின் செயல்பாடுகளை மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு மிக முக்கியப் பொறுப்பை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார் நடிகர் ஆர். மாதவன்.
தைரியமே ஜோஸ் ஆலுக்காஸின் அனுபவம்
ஜோஸ் ஆலுக்காஸ், என்றும் தைரியத்தின் பக்கமே நிற்பவர். இந்த நெறிமுறைதான். அனைத்துவிதமான விளம்பரப் பிரசாரத்தையும் முன்னெடுக்கிறது. அந்தத் தைரியம் தூய்மை மற்றும் நியாயமான வர்த்தக நடைமுறைகள் மீதான நீடித்த விளம்பரப் பிரசாரம் மூலம் மக்களுக்கும் கடத்தப்பட்டுள்ளது.
ஜோஸ் ஆலுக்காஸின் வர்த்தக நெறிமுறைகள் மற்றும் மதிப்பீடுகளால், அந் நிறுவனத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டு, அதனுடன் நான் ஐக்கியமாகிவிட்டேன் என்கிறார், பிராண்ட் ஸ்ட்ராடஜிஸ்ட் வி.ஏ. ஸ்ரீகுமார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜோஸ் ஆலுக்காஸின் பிராண்ட் கொள்கையாக தைரியம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. ஜோஸ் ஆலுக்காஸில் தைரியமாக தங்கம் வாங்கலாம். அது ராசியான தங்கம் என வாடிக்கையாளர்கள் எங்களிடம் நகை வாங்கி ஆதரவு தந்து வருகின்றனர். அதில் இருந்துதான், தைரியம் என்பதை நாங்கள் எங்களுடைய கொள்கை முழக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் வர்கீஸ் ஆலுக்கா, பால் ஜெ ஆலுக்கா மற்றும் ஜான் ஆலுக்கா” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.