சென்னை விமான நிலையத்திற்குள் உள்ள கடைகளில் போலியான பொம்மைகள் போலி ஐ எஸ் ஐ முத்திரைகளுடன் விற்பனை. இந்திய தர நிர்ணய அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பொம்மைகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை. நிலைய உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையங்களில், பயணிகள் வருகை புறப்பாடு பகுதிகளில், பொம்மைகள், டாய்ஸ்கள் போன்றவைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்திய சர்வதேச விமான நிலையத்தில், இந்த தடைகள் அமைந்துள்ளதால், இங்கு தரம் வாய்ந்த ஐஎஸ்ஐ முத்திரை பதித்த பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இங்கு போலியான முத்திரைகளுடன் கூடிய பொம்மைகள், டாய்ஸ்கள் பெருமளவு விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

 



இதை அடுத்து சென்னையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் உள்ள பொம்மைகள், டாய்ஸுகள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத, இல்லையேல் முத்திரைகளே இல்லாத போலியான பொம்மைகள் டாய்ஸ்கள் பெருமளவு இருந்ததை கண்டுபிடித்தனர். இவ்வாறான போலி  ஐஎஸ்ஐ முத்திரைகள் பதித்த, முத்திரைகள் இல்லாத 327 போலி பொம்மைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் 129 பொம்மைகள் பேட்டரி போன்ற மின்சாரங்களால் இயங்குபவைகள். 198 பொம்மைகள் மின்சாரம் இல்லாமல் கீ கொடுத்து இயங்க்கூடியவைகள்.

 

கடையை மூடி  சீல் 

 

இதை அடுத்து இந்திய தர நிர்ணய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த பொம்மைகளை பறிமுதல் செய்ததோடு,இதை போல் போலியான பொம்மைகளை வைத்து விற்பனை செய்த கடை நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்தனர் . மேலும் இதேபோன்ற பொம்மைகள் எவ்வளவு நாட்களாக இங்கு வைத்து வருகின்றனர்? இந்த போலியான பொம்மைகள் இவர்களுக்கு  எங்கிருந்து வருகிறது? என்று குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு போலியான இந்த பொம்மைகளை விற்பனை செய்த அந்தகடையை மூடி  சீல் வைத்துள்ளனர்.

 

இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை

 

இந்த குற்றங்களை செய்த கடை நிர்வாகிகளுக்கு இந்திய BIS சட்ட விதி, பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் இரண்டு லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்ற போலியான பொம்மைகள் டாய்ஸ்கள் எங்காவது விற்பனை செய்வதாக தெரிய வந்தால், பொதுமக்கள் உடனடியாக, 9486873051 என்ற எண்ணிற்கோ, இல்லையேல் பி ஐ எஸ் இணையதளத்திலோ புகார் அளிக்கலாம் என்று இந்திய தர நிர்ணய அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதைப் போன்ற போலியான பொம்மைகள், தெருக்களிலோ, இல்லை கடை பஜர்களில் உள்ள கடைகளில் விற்பனை ஆனால் கூட பரவாயில்ல. ஆனால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய, பாதுகாப்பு மிகுந்த ஒரு சர்வதேச விமான நிலையத்திற்குள் உள்ள கடைகளில் இதைப்போன்ற போலியான பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு, அதிகாரிகள் அதை பறிமுதல் செய்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.