தன் சாவிற்கு தனது மாமியார்தான் காரணம் என வாட்சப்பில் ஆடியோ அனுப்பி புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது பார்க்கலாம். 


சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் இந்துமதி (25). இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி நகரை சேர்ந்த குமரன் (37) என்பவரை, பெற்றோர் ஏற்பாடு செய்ததனின் அடிப்படையில் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து புகுந்த வீட்டிற்கு சென்ற இந்துமதியை குமரனின் தாயார், நீ ராசில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை.குறைவாக சாப்பிடு என்று அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கி தொடர்ந்து குறை கூறி வந்ததாக சொல்லப்படுகிறது.  இதனிடையே இந்துமதி கர்ப்பமும் தரித்தார்.




மாமியாரின் தொடர் தொல்லை


மாமியாரின் தொடர் தொல்லை காரணமாக, ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த சொல்லப்படும் இந்துமதி வேளச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். திருமணமாகி 5 மாதங்களே ஆனநிலையில் 4 மாத கர்ப்பிணியாக இந்துமதி வீட்டிற்கு வந்தது குடும்பத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் நிச்சயம் கணவர் தன்னை சமாதானம் செய்து அழைத்துச்செல்ல வருவார் என்று இந்துமதி எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்துள்ளார். ஆனால் குமரன் அங்கு வராமலேயே இருந்துள்ளார்.




 


விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இந்துமதி


இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற இந்துமதி, தற்கொலை செய்ய முடிவெடுத்து, தனது அக்காவிற்கு வாட்சப்பில் “தன் சாவுக்கு குமரனின் அம்மாதான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம்” என்று ஆடியோ அனுப்பி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


உயிர் பிரிந்தது


இதனிடையே ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்துமதியின் அக்கா, பதறியடித்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். ஆனால் அதற்குள் இந்துமதியின் உயிர் பிரிந்து விட்டது. இதனையடுத்து தகவலறிந்த வேளச்சேரி போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு இராயபேட்டை அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புது மணப்பெண் திருமணமாகி 5 மாதத்தில் உயிரிழந்ததால், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண