செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் குப்பம்மாள் நகரில் பெயிண்டர் சங்கர் வீட்டில், நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்ற இருவரை போலிசார் கைதுள்ளனர். கேளம்பாக்கம் இந்தியன் பெட்ரோல் பங்கில் பெயிண்டர் வேலை செய்யும் சங்கர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்பாக ஒரு வாகனத்தில் வந்த வழக்கறிஞரான, சிவபிரசாத் மற்றும் நண்பர் விக்கி என்கின்ற விக்னேஷ் மதுபோதையில் வந்து பெட்ரோல் நிரப்பி உள்ளனர்.
அப்போது அந்த நபர்கள் பெட்ரோல் நிரப்பி விட்டு செல்லாமல் அங்கேயே வெகு நேரமாக நின்று இருந்ததால் பெயிண்டர் சங்கர் மதுபோதையில் இருந்த இருவரையும் சற்று தள்ளி நிற்கும் படி சங்கர் கூறியுள்ளார்.பின்பு வழக்கறிஞரான சிவபிரசாத் அவரது நண்பர் விக்னேஷ் இருவரும் சங்கரிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் சிவா மற்றும் அவரது நண்பரான விக்னேஷ் இருவரும் மதுபோதையில் பெயிண்டர் சங்கர் வீட்டிற்கு ரகளையில் ஈடுபட்டு உள்ளனர்.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் நள்ளிரவு நேரத்தில் சங்கர் வீட்டிற்கு சென்று பெட்ரால் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சங்கர் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் புதுபபாக்கம் பகுதியில் இருந்த வழக்கறிஞர் சிவபிரசாத் மற்றும் அவரது நண்பரான விக்னேஷ் ஆகிய இருவரை கேளம்பாக்கம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் பெட்ரோல் குண்டுகளை கைபற்றினர். கொலை முயற்சி, உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய பொருளை பயன்படுத்தியது என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். மது போதையில் தனது நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சில் வழக்கறிஞர் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் போக்கு காவல்துறையில் புகார் அளித்தார். எவ்வளவு தைரியம் இருந்தால் புகார் கொடுத்து இருப்பீர்கள் என மிரட்டி பெட்ரோல் வெடிகுண்டு வீசி உள்ளனர். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தோம் என தெரிவித்தனர்.