Chennai: அட்டைக்கு நடுவே செல்போன்! சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் கழிவறையில் கேமரா.!

கிண்டி சங்கீதா ஹோட்டல் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஸ்பை கேமராக்கள், குற்றங்களை கண்டறியவும், உளவுப்பணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட அரிய சாதனம். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது அது கையில் இருப்போர் மனநிலையை பொருத்தது. அப்படி தான், கேமராக்கள், ஒரு அச்சுறுத்தல் சாதனமாக சமீபத்தில் மாறி வருகிறது. பெரும்பாலும் பாலியல் குற்றங்களுக்கு தான் ஸ்பை கேமராக்களை பலர் பயன்படுத்துகின்றனர்.

Continues below advertisement

அவ்வாறு பயன்படுத்துவோர், எளிதில் சிக்கி கொள்வதும், பின்னர் அவர்கள் சிறை செல்வதும் நாம் தொடர்ந்து பார்த்தும், படித்து வருகிறோம். துணிக்கடையில் கேமரா, நகைக்கடையில் கேமரா, விடுதியில் கேமரா, சில சமயங்களில் பாத்ரூம், கழிப்பறைகளில் கூட கேமரா வைத்து ரகசியமாக ஆபாச குற்றங்கள் புரிந்தோர் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றனர். இப்போது நாம் பார்க்கவிருப்பதும் அது மாதிரியான ஒரு அதிர்ச்சி தகவல் கொண்ட செய்தி தான். ஆனால், அது நடந்த இடம் அதை விட அதிர்ச்சியானது. அதேபோல், நினைவுகளை பத்திரபடுத்திக்கொள்ள மொபைல்போன்களில் இருக்கும் கேமராகள் கொண்டு பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கிண்டி சங்கீதா ஹோட்டல் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளசரவாக்கத்தை சேர்ந்த திமுக மகளிரணி அமைப்பாளர் பாரதி என்பவர், விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேர்காணலுக்கு வந்துள்ளார். அப்பொழுது கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சங்கீதா ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.


சாப்பிட்டுவிட்டு கழிவறையை பயன்படுத்த சென்றபோது, அங்கு எக்சாஸ்டர் ஃபேன் உள்ள மேல் பகுதியில் அட்டைகளுக்கு நடுவில் மொபைல் போன் ஒன்று மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. சந்தேகமடைந்த பாரதி, அந்த செல்போனை எடுத்து பார்த்தபோது, வீடியோ கேமரா ஆன் செய்யப்பட்டு வீடியோ ரெக்கார்ட் செய்யப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 


இதையடுத்து, உடனடியாக செல்போன் ஆதாரத்தை கொண்டு ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, அவர் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விருதுநகரை சேர்ந்த உணவக ஊழியர் தவக்கண்ணன்(எ) கண்ணன் என்பவர், தனது செல்போனை பாத்ரூமில் வைத்து பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, உணவு சப்ளையர் கண்ணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement