உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா, கொசபாளையம் சூரியகுளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர்(55). சமையல் வேலை செய்து வருகிறார். இவர், தனது மனைவி ஆரவள்ளி என்பவருடன் சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைபள்ளம் அண்ணா தெருவில் வசித்து வந்தார்.


தென்னாப்பிரிக்கா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி... விமானத்தில் வீரர்கள்!


கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி சேகர், தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்ததாக தெரிகிறது. அதற்கு ஆரவள்ளி மறுத்துள்ளார். அப்போது சேகர், வேறு யாருடனாவது தொடர்பு வைத்துள்ளாயா? என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. 


இதில் ஆத்திரம் அடைந்த சேகர், ஆரவள்ளியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். தாம்பத்திய உறவுக்கு வராததால் கணவரே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


மலேசியா: படகு கவிழ்ந்து விபத்து - 11 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு; 25 பேர் மாயம்


இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக வழக்கை விசாரித்த நீதிபதி, நேற்று தீர்ப்பு வழங்கினார். 


‛முட்டாள்... நீங்க ரியல் ஹீரோ இல்லை திருந்துங்கள்...’ அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்!


தீர்ப்பில் மனைவியை கொலை செய்த சேகருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். கணவன் - மனைவி வாழ்க்கை என்பது வெறும் உடலுறவு சம்பந்தப்பட்டது மட்டுமல்லை. அது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதை ஒவ்வொரு கணவனும் மனைவியும் உணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே ஆரோக்கியமான அமைதியான குடும்ப வாழ்க்கை சாத்தியம்.