அக்கா கணவர் வாங்கியக் கடனுக்கு பாஸ்புட் கடை உரிமையாளரைக் கடத்தி வீட்டை எழுதி வாங்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


திருவல்லிக்கேனியைச்சேர்ந்த 32 வயதான சஜன், தனது வீட்டின் தரைத் தளத்தில் பாஸ்புட் கடை ஒன்றினை  நடத்திவருகிறார். இவரது அக்கா கணவர் கிருஸ்துராஜ் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் நிலையில், புதுப்பேட்டையைச்சேர்ந்த நபர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் பல நாள்கள் ஆன நிலையிலும் கடனைத்திரும்பித் தராமல் இருந்துள்ளார். பணத்தைப் பல முறைக்கேட்டு வந்த நிலையில் தான் கடந்த 8 ஆம் தேதி, சஜினின் கடைக்கு வந்த 7 பேர், “ உங்களது அக்கா கணவர் கிருஸ்துராஜ் எங்களிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு தலைமுறைவாக உள்ளார் எனவும் அவர் இருக்கும் இடத்தைத்தெரிவிக்க வேண்டும் என்று அவரைக்கடத்தி சென்றுவிட்டனர்.


இதனையடுத்து பாஸ்புட் கடையின் ஊழியர் சைபுல், இச்சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரினையடுத்து சஜினின் செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்தனர். அப்போது புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சஜினை அடைத்து வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து சஜினை மீட்டப்போலீசார், கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட புதுப்பேட்டை முனியப்பன்பிள்ளைத்தெருவைச்சேர்ந்த ராஜா உசேன், கொளத்தூர் பெரியார் நகர் 5 வது குறுக்குத்தெருவைச்சேர்ந்த முகமது சுல்தான், புதுப்பேட்டை மீர்மதன் அலி தெருவைச்சேர்ந்த முகமது அக்கீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.





மேலும் விசாரணையில் சஜினின் அக்கா கணவர் கிருஸ்துராஜ் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி,பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், போலீசாரால் தற்போது கைது செய்துள்ள நபர்களிடமும் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.. மேலும் வாங்கிய கடனுக்கு வட்டியும் பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் தான் பணத்தைத் திரும்பப் பெறும் நோக்கில், சஜினைக்கடத்தி வீட்டுப் பத்திரத்தை எழுதி வாங்கியது தெரியவந்தது. தற்போது பலர் கைதாகியுள்ள நிலையில், மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அபுபக்கர், அமீன், தியாகு ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அக்கா கணவர் வாங்கியக் கடன் தொகைக்காக மச்சானைக்கடத்தி வைத்து சினிமா பட பாணியில் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண