மகாராஷ்டிராவில் சொகுசு கப்பல் ஒன்றில் சானிடைரி நாப்கினுக்குள் போதைப்பொருள்களை விற்பனை செய்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய நபர்கள் பலரிடம் இதுக்குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.


இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை எப்படியாவது விற்பனை செய்தாக வேண்டும் என்பதற்காக பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டுவகின்றனர். ஆனால் என்ன செய்தாலும் இறுதியில் போலீசாரிடம் எப்படியாவது சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது. மும்பை- கோவா  இடையே சென்ற கார்டிலியா சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மும்பை சொகுசு கப்பலில் சோதனை மேற்கொண்டனர். கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் நைஜீரியாவைச்சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.





இதோடு மட்டுமின்றி, சொகுசு கப்பலில் கைதானப் பெண்ணிடம் விசாரணை நடத்தியப் போது, மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும்  சானிடரின்  நாப்கின் உள்ளே போதைப்பொருள்களை மறைத்து வைத்துக் கப்பலுக்குள் எடுத்து வந்து விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.


இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் மும்பையில் பல நகரங்களில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். அதில் தயாரிப்பாளர் இம்தியாஷ் கத்ரி என்பவரது மும்பை வீட்டில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதில் சாண்டாகுரூசைச் சேர்ந்த சிவராஜ் ராம்தாஸ் என்பவரைப்  போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதோடு தெற்கு மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து நடிகர் ஷாரூக்கானின் கார் டிரைவரிடம் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். 


இந்த சூழலில் தான், மஹாராஷ்டிரா தேசிய வாத காங்கிரஸைச்சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக், போதை விருந்து நடத்தக் கப்பலில் இருந்து முதலில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் அதில் பாஜக தலைவர் மோஹித் பாரதியாவின் உறவினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில்  போலீசார் விடுவித்ததாகக்கூறியிருந்தார். இந்நிலையில் தான் இந்தக் கருத்தைத் தெரிவித்த அமைச்சர் மீது, 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்குப்பதிவு செய்யப்போவதாக பாஜக தலைவர் மோஹித் பாரதியா தெரிவித்துள்ளார். மேலும் சொகுசுக்கப்பலுக்குள் எவ்வாறு போதைப்பொருள்கள் கொண்டு வரப்பட்டது? என்பது குறித்தும் பலரிடம் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.