சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா(40). இவர் பிரபல ரவுடி. கடந்த 9ம் தேதி இரவு மயிலாப்பூரில் உள்ள அவரின் வீட்டிலிருந்து வெளியே வந்த டொக்கன் ராஜாவை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி டொக்கன் ராஜாவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது.
பின்னர் மயிலாப்பூர் போலீசார் இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2003 ஆம் ஆண்டு கதிரவன் என்பவரை கொலை செய்த வழக்கில் டொக்கன் ராஜா முக்கிய குற்றவாளி என்பதும், அந்த கொலைக்கு பழிக்கு பழியாக டொக்கன் ராஜாவை அவரது மகன்கள் ஆட்களை வைத்து கொலை செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் இன்று திண்டிவனம் நீதிமன்றத்தில் கதிரவனின் மகனான நரேஷ் குமார்,மற்றும் சென்னையைச் சேர்ந்த அவரது நண்பர்கள் ராஜேஷ், சபரிநாத்,மனோஜ் குமார், நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராக வந்தனர். முதல் தகவல் அறிக்கை,போன்ற முக்கிய ஆவணங்கள், இல்லாத காரணத்தினால் நீதிபதி அவர்கள் நான்கு பேரையும் ஆஜர்படுத்த ஏற்கவில்லை. இவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் இவர்களை திண்டிவனம் போலீஸ் பலத்த பாதுகாப்புடன் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இவர்களை காவல் நிலையத்தில் வைத்து உள்ளனர். சென்னையில் இருந்த மயிலாப்பூர் காவல் துறையினர் வந்த பிறகு இவர்கள் நான்கு பேரையும் மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்புடைப்பர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் திண்டிவனம் காவல் நிலையம் முன்பு சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்