சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது ஆழ்வார் திருநகர். இந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அந்த பள்ளியில் படித்து வந்த 2ம் வகுப்பு மாணவர் தீக்‌ஷித் பள்ளியில் காலை நடந்து சென்று கொண்டிருந்தான்.


அப்போது, பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரியும் பூங்காவனம் பள்ளி வேனை பின்னோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். பூங்காவனம் மாணவன் தீக்‌ஷித் பின்னால் நடந்து வந்ததை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பூங்காவனம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் வேன் மாணவன் தீக்ஷித் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவன் தீக்‌ஷித் பரிதாபமாக உயிரிழந்தான்.


பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவன் தீக்‌ஷித் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வேன் ஓட்டுநர் தீக்‌ஷித் கைது செய்யப்பட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண