சென்னையை அடுத்த நன்மங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற நபருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரது வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒருநாள் பிரவீன்குமார் திடீரென தனது மனைவியிடம், திருமணத்திற்கு முன்பு யாரையோ காதலித்தாயோ? என்று கேட்டு அடித்துள்ளார்.
அதற்கு அந்த இளம்பெண் படிக்கும்போது இருவரும் பழகினோம். ஆனால், அதன்பின்பு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும், மனைவியின் முன்னாள் காதல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரவீன்குமார் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், தனது மனைவியின் செல்போனில் அவர் படிக்கும்போது பழகியதாக கூறிய நண்பருடன் எடுத்துக்கொண்ட அழிக்கப்பட்ட புகைப்படங்களை சாப்ட்வேர் தொழில்நுட்பத்துடன் பிரவீன்குமார் மீண்டும் பதிவிறக்கம் செய்துள்ளார்.
இது மட்டுமின்றி, மனைவி குளிக்கும்போது அவருக்கே தெரியாமல் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, தன்னுடைய மனைவி தன்னுடன் தனிமையில் இருந்ததையும் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துள்ளார். அடிக்கடி மனைவியின் முன்னாள் காதல் விவகாரத்தை கூறி அடித்து உதைத்த பிரவீன்குமார், தான் வைத்திருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் மனைவியிடம் காட்டியுள்ளார். இதைக்கண்டு அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரவீன்குமார் இந்த வீடியோக்களை வெளிவிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூபாய் 30 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பின்னர்தான், மணமகன் பிரவீன்குமார் பற்றி விசாரித்தபோது அந்த இளம்பெண்ணை இதற்கு முன்பு காதலித்த நபரும், பிரவீன்குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இருவரும் இணைந்து திட்டமிட்டே இதைச் செய்ததும் தெரிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரவீன்குமாரின் பெற்றோரும் துணை இருப்பதாக அந்த இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், இநத விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூடம் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். இளம்பெண்ணை நண்பருடன் திட்டமிட்டு ஏமாற்றி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து கணவனே ஏமாற்றியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்