சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கு 2020 ஆம் ஆண்டுதான் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன்பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து அப்போதைய காவல்துறை DGP உத்தரவிட்டார். கடந்த 6 மாதமாக தீவிரமாக விசாரணை நடத்திய CBCID போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.


தொழிலதிபர் ராஜேஷை கட்டி வைத்து சொத்தை எழுதி வாங்கிய புகாரில் சிக்கிய சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.




ஆனால், அவர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதால், தீவிரமாக தேடி வருகின்றனர். இன்னும் அவர்கள் கிடைக்கவில்லை, இந்நிலையில் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொழிலதிபரை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வரும் 6 பேரையும் சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...


 






















மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: சாலை பள்ளங்களை சீர்செய்ய 1000 பணியாளர்கள்: ஐடி ஊழியர் விபத்தை தொடர்ந்து விழித்த சென்னை மாநகராட்சி!