முன்னாள் மனைவியை பாலியல் தொல்லையால் கொல்ல முயற்சி செய்த சென்னையைச் சேர்ந்த  தொழில் அதிபர் மற்றும் அவரது நண்பர் கேரள காவல் துறை கைது செய்துள்ளது. 


சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர், கேரள மாநில திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனது மனைவியை நண்பனுடன் சேர்ந்து  கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததை வீடியோவைக் காட்டி மிரட்டி பாலியல் வல்லுறவு செய்து வந்துள்ளனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்த 35 வயதான அந்த மனைவி என்ன செய்வது என தெரியாமால் இவர்களின் பாலியல் பசிக்கு இறையாகி வந்துள்ளார்.  அவர்களின் இச்சைக்கு இணங்க மாட்டேன் எனச் சொல்லும் போது இருவரும் இணைந்து அந்த பெண்ணை கடுமையாக தாக்கியும் வந்துள்ளனர்.  இந்த தொடர் பாலியல் வல்லுறவு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவும் அந்தப் பெண்ணைத் தாக்கி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி உள்ளனர். இதில் மிகவும் மோசமான உடல் நிலைக்கு சென்ற அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான், பெண்ணின் கையறு நிலை வெளியில் தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த காவல் துறை, பெண்ணின் கணவரான தொழில் அதிபர் மற்றும் அவரது நண்பர் என இருவரையும் காவல் துறை கைது செய்துள்ளது. இருவரின் மீதும் காவல் துறையினர், பாலியல் பலாத்காரம் மற்றும் தாக்குதலை சமூக ஊடகங்கள் மூலம் பதிவு செய்து பரப்ப முயன்றதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற காவல் துறை செய்தியாளர்களிடம், "வெள்ளிக்கிழமை நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் எடுத்தபோது கணவரின் நண்பனால் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. கணவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அவரது நண்பருக்கு எதிராக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.


மனைவியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய தொழில் அதிபர் கணவரையும் அவரது நண்பரையும் இருவரையும் கைது செய்து உள்ளூர் நீதிமன்றம் நீதிமன்ற காவலில் உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டு பாலியல் வல்லுறவுச் சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண