ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 4வது நாளை எட்டியுள்ளதுடன், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 


ஆஷஸ் டெஸ்ட்:


லார்ட்ஸில் நடந்து வரும் டெஸ்டின் 4 வது நாளில், ஆஷஸ் வரலாற்றில் ஆஷஸ் வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா அணியின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயன் களமிறங்கியது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. 






முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்கள் எடுத்தது, இங்கிலாந்து அணி 325 ரன்கள் சேர்த்து. அதன் பின்னர்  இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது ஒன்பதாவது விக்கெட்டை 264 ரன்களுக்கு இழந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது நாதன் லைனுக்கு வலது கால் தசையில் காயம் ஏற்பட்டதால்  அவர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


ஆனால் இன்னும் இரண்டாவது போட்டி முடிவடையாத நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கமுடியாத சூழல் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது.  ஆனால் வேறு வழி இல்லாமல் நாதன் லயனை 10வது விக்கெட்டுக்கு நேரத்தை போக்க ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் களமிறங்க வைத்தார்.


கைதட்டிய ரசிகர்கள்:


9வது விக்கெட் போன பின்னர் அஸ்திரேலிய அணி இழந்த பின்னர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஆஃப்-ஸ்பின்னர்  நாதன் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வந்தார். இதனால், லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும் நாதன் லைனுக்கு எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தது.  






நாதன் லைன் மைதானத்திற்கு வந்ததை பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். 13 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி  விளாசினார்.  இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ளில் 279 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர், 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.