துபாயில் இருந்து இந்தியா வந்த நபர் 16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement


சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியின் பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என்று மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரி அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். 


இதையடுத்து, முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காணாமல் போன சிறுமியின் செல்போனை ஆய்வு செய்தனர். இதில், அந்த 16 வயது சிறுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாயில் வசித்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீ தரன் என்பவரிடம் பேசி பழகி வந்தது தெரிய வந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீ தரன் துபாயில் இருந்து சென்னை வந்ததும், தான் காதலித்த அந்த சிறுமியை தஞ்சாவூருக்கு அழைத்து சென்றதும் தெரிய வந்தது. 


தொடர்ந்து, இவர்கள் இருவரையும் தேடி வந்த காவல்துறையினர் தஞ்சாவூரில் இருவரையும் கைது செய்து, மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீ தரன் அந்த சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை போரூரில் உள்ள அனைத்து பெண்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 


தொடர்ச்சியாக, ஸ்ரீ தரனிடம் நடத்திய கிறுக்குப்பிடி விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீ தரனுக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் சிறுமியை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கில் துபாய் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த ஸ்ரீ தரன் விடுப்பில் இந்தியா கிளம்பி வந்துள்ளார். 


 தமிழ்நாடு வந்த ஸ்ரீதரன் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஸ்ரீ தரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரித்து நடத்தி வருகின்றனர். 


கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களின் மூலம் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுமிகள் இதுபோன்ற சம்பவங்களில் மாட்டிக்கொண்டு விடுகின்றனர். தொடர்ந்து, பெற்றோர்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் வைக்க வேண்டும் என்று காவல் துறையினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண