பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மனநலம் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளை அடிக்கடி அவரது சமூக  வலைதளத்தில் ஷேர் செய்வது வழக்கம்.


மும்பை நகரத்தில் ஒரு நிகழ்ச்சியில், அவர் கடந்து வந்த மன அழுத்ததை பற்றியும் மன அழுதத்தை மருத்துவர்களின் உதவி மற்றும் குடும்பத்தின் சப்போர்ட்டுடன் எப்படி கடந்து வருவது என்பதை பற்றியும் பேசினார். தீபிகா சில சமயங்களில் தற்கொலை செய்து சொள்ளலாம் என்றும் நினைத்துள்ளாராம்.


“எனது அம்மாவிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஏனென்றால், அவர்தான் என் மனநல பிரச்சனையை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருந்தார்.சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் எல்லாம் நன்றாகதான் இருந்தது ஆனாலும் காரணம் இல்லாமல் சில சமயங்களில் உடைந்து வீட்டிலே முடங்கி விடுவேன். அந்த சமயத்தில் நீண்ட நேரம் தூங்கி எழுவது தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பிக்க  உதவியது.” என்று பேச தொடங்கினார்.






2015-ல் மன அழுதத்தில் இருந்து வெளியே வந்த நடிகை  Live Love Laugh என்ற இயக்கத்தை நடித்தி மன அழுத்தத்தால்  பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ”பெங்களூருவில் வசித்து வரும் என் பெற்றோர் என்னை பார்க்க மும்பைக்கு வருவார்கள். அவர்களிடம் நான் சந்தோசமாக இருப்பது போல காட்டிக்கொள்வேன். இது போல் ஒருமுறை என் பெற்றோர் என்னை விட்டு  நீங்கும் போது மீண்டும் உடைந்து போனேன்.” என்று வருத்தமாக கூறினார்.


இதை பார்த்த என் அம்மா, எதாவது பிரச்சணையா? வேலையில் பிரச்சணையா? காதலனுடன் பிரச்சணையா? என்று கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும்  கூறாமல் அமைதியாக இருந்தேன். என் கவலையை தீர்க்க கடவுள் என் தாயை அனுப்பியதாக நினைத்து கொண்டேன்.


மன அழுத்ததில் இருந்து மீள எனக்கு மருத்துவர்களின் உதவியும் ஆலோசனையும் தேவைப்பட்டது. சில மாதங்களுக்கு நான் அறிவுரைகளின் படி நடந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். 2015-ஆம் ஆண்டில் மன அழுத்தத்தால் தான் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். திசை மறந்த பறவையாய் தூக்கத்தில் இருந்து எழுவேன் சில சமயங்களில் அழுது இருக்கிறேன் என்று தனது கடந்த கால வாழ்வை பற்றி மனம் திறந்து தீபிகா படுகோனே பேசினார்.