ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ரித்திகா சொல்லிய கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து வித்தியாசமாகவே இருக்கும். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள், டாஸ்குகள் என இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரம் ஒளிபரப்பான எபிசோடில் பார்ட்டிக்கு நடிகைகள் ரேஷ்மா பசுபுலேட்டி, பிக்பாஸ் ஜூலி, கேபிரியல்லா ஆகியோர் பங்கேற்றனர். 2வது எபிசோடில் நடிகை அமலாபால் கலந்து கொண்டார்.
இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 3வது எபிசோடில் பாக்யலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகை சுசித்ரா ஷெட்டி, நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, திவ்யா கணேஷ், ரித்திகா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் போலவே ஏற்கனவே பேமஸான ராமர் தலைமையில் சுசித்ராவுக்கும், ரேஷ்மாவுக்கு இடையே பஞ்சாயத்து நடப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அப்போது ராஜூ நடிகைகள் ரித்திகா, திவ்யா கணேஷிடன் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவியை ஏமாற்றி தில்லுமுல்லு பண்ணும் கோபி மாதிரி கணவன் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என கேட்கிறார். அதற்கு திவ்யா கணேஷ் அப்படி போ என சொல்லிடுவேன். போறவங்களை பிடிச்சி வச்சி என்ன பண்ண...ஆனால் ஒன்று திரும்பி வந்தால் செருப்பால் அடிப்பேன் என தெரிவிக்கிறார்.
அதேசமயம் ரித்திகாவோ நான் ரியல் லைஃப்பில் அப்படி ஒரு கோபி கேரக்டரை சந்தித்தால் தலைமேல் கல்லை போட்டு கொன்று விடுவேன். அப்படி ஒரு துரோகம் பண்றவங்க உலகத்திலேயே இருக்க வேண்டாம் என நினைப்பேன் என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்