சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பிள்ஸ் 2 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் ஞானபிரகாசம்(20) என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. ஞானபிரகாசம் ஒரு டிரம்ஸ் இசைக்கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த மாணவியின் பெற்றோர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களுடைய மகளை காதலிப்பதாக கூறி ஞானபிரகாசம் ஏமாற்றியுள்ளதாக அப்புகாரில் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரை தொடர்ந்து ஞானபிரகாசத்தை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இவர் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இவருக்கும் மாணவிக்கும் 5 வருடங்களாக பழக்கம் ஏற்பட்டதாக கூறினார். அத்துடன் இவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உடலுறவு வைத்து கொண்டதாக ஒப்புக் கொண்டார். மேலும் அப்படி இருக்கும் போது மாணவிக்கு தெரியாமல் ஞானபிரகாசம் தன்னுடைய செல்போனில் படங்கள் எடுத்ததாக கூறினார்.
மேலும் அந்த மாணவியின் பெற்றோர் வசதியானவர்கள் என்பதை தெரிந்து கொண்டு பல முறை மாணவியிடம் பணத்தை கேட்டுள்ளார். சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கியுள்ளதாக காவல்துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதற்காக இவர் மாணவியிடம் 7 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதை அவர் தர மறக்க இவர் தன்னிடம் உள்ள ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டியுள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றால் இந்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றிவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்து ஞானபிரகாசம் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க வைத்துள்ளார். ஞானபிரகாசத்தை விசாரணை செய்த காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 ஆண்டுகளாக சிறுமியை காதலிப்பதாக கூறி ஒருவர் ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்