சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை உயிரினமான 2 அணில் குரங்குகள் கடந்த 8ம் தேதி காணாமல் போனதாக பூங்கா ஊழியர்கள் வனசரகர் 2 வாசு என்பவரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரகர் அணில் குரங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டினை பார்த்த போது கம்பிகள் நறுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு
இது தொடர்பாக கடந்த 8ம் தேதி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பூங்காவின் ஒப்பந்த ஊழியரான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சத்தியவேல்(34), என்பவரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தனது நணபர் ஜானகிராமன்(எ) ஜான்(21), என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி திருடி விற்பனை செய்ய முடிவு செய்து கடந்த 7ம் தேதி ஜான் பூங்காவிற்குள் பார்வையாளர் போல் வந்து ஊழியர்கள் அனைவரும் சென்ற பிறகு அங்கேயே பதுங்கி இருந்து கட்டர் உபகரணத்தால் கூண்டினை நறுக்கி அணில் குரங்குகளை திருடி பையில் போட்டுக் கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார். அணில் குரங்குகளை விற்பனை செய்வதற்காக லோகநாதன் (எ) சூர்யாவிடம் கொடுத்துள்ளார். சூர்யா, வினோத் (29), என்பவருக்கு 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு ஆண் அணில் குரங்குகளை மீட்டு பூங்காவில் விட்டனர். வனவிலங்கு சட்டப்படி அரியவகை விலங்கினங்களை வாங்குவதும், விற்பதும் சட்டத்திற்கு புறம்பானது.களவு போன அரியவகை அணில் குரங்குகளை மீட்ட தனிப்படை போலீசாரை தாம்பரம் ஆணையர் ரவி பாராட்டினார்.பூங்காவில் அரிய வகை அணில் குரங்குகள் திருட்டு சம்பவம் எதிரொலி காரணமாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் பூங்காவின் நுழைவுவாயில், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட 3 இடங்களில் பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பூங்காவில் இருந்து 5 மணிக்குள் வெளியேற வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | காஞ்சியில் ஓபிஎஸ் கலந்து கொண்ட பரப்புரை கூட்டம் -நடத்தை விதிகளை மீறியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு