செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  கேசாராம் என்பவரது மகன் தர்மாராமன் செட் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நகை கடை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம் போல் தர்மாராம் சேட் கடையை திறந்தபோது, வடபாதி கிராமம் புதிய காலனி பகுதியை சேர்ந்த சாம்மூர்த்தி என்பவருடைய மகன் சிலம்பரசன் நகை ஒன்று அடகுவைக்க வந்தபோது தர்மா ராம் சேட்டு சந்தேகத்தின் காரணமாக நகை அடகு வைக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவருடன் கடுமையான வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். எங்களிடம் நகை வாங்க மறுத்த உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் எனவும் எச்சரித்துள்ளனர்.


 

அதனை தொடர்ந்து அன்று மாலை மீண்டும் ஆத்திரத்துடன் கடைக்கு குடிபோதையில் வந்த சிலம்பரசன்  கடைக்குள் புகுந்து தர்மாராம் சேட்டை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த தர்மன் சேட்டை மீட்டு அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். 





இதுத்தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சிலம்பரசனை தேடி வந்தனர். சிலம்பரசன் செங்கல்பட்டு நகர் பகுதியில் தலைமறைவாக இருந்துகொண்டு பல இடங்களில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிலம்பரசன் பயன்படுத்திய மொபைல் டவர் மூலமாகவும் செங்கல்பட்டு நகர் பகுதியில் சிலம்பரசன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.



இதனையடுத்து காவல்துறையினர் நேற்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சிலம்பரசன் நின்று கொண்டிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணைக்காக செங்கல்பட்டு மாவட்டம், காவல் நிலையத்தில் வைத்து இருந்த பொழுது சிலம்பரசன் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். பாத்ரூமில் வழுக்கி விழுந்த சிலம்பரசனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டு கைக்கு மாவு கட்டு போடப்பட்டு உள்ளது. சிலம்பரசன் தற்பொழுது முழு உடல் நலத்துடன் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.