ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த , வங்கி பணம் 22 லட்சம் மர்ம நபர்கள் கார்கண்ணாடி உடைத்து கொள்ளை

 

தனியார் ஏடிஎம்கள்

 

தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் ஏடிஎம்களின் தேவையும் அதிகரித்து வருகின்றன. இதனால் சிறு நகரங்களில் கூட பல்வேறு தனியார் ஏடிஎம்கள் வர துவங்கியிருக்கின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை பகுதியில் தனியார் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்களில் ஏடிஎம் நிறுவனங்கள் சார்பில் பணம் நிரப்பப்படுவது வழக்கம். 



 

ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணி

 

அந்த வகையில் இன்று, மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கியில் இந்தியா 1 வங்கியின் ஏடிஎம்மில் நிலையத்தில் பணம் நிரப்புவதற்காக, மதுராந்தகம் பாரத  ஸ்டேட் வங்கியில்  இருந்து, 94 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு 2 ஊழியர்கள் காரில்  மதுராந்தகத்தில் உள்ள செங்குந்தர் பேட்டை கடப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள இரு ATM மில் பணத்தை நிரப்பி உள்ளனர்.



 

அதிர்ச்சி சம்பவம்

 

இதனை அடுத்து கடைசியாக மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ATM மில் பணம் நிரப்பி கொண்டு இருந்த பொழுது , அவர்கள் காரில் இருந்த 22 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் காரின் , பின்புறம் உள்ள கண்ணாடிய உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து  மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

போலீசார் தீவிர விசாரணை

 

முதற்கட்டமாக சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து விசாரணையை துவங்கி இருக்கின்றனர். ஏடிஎம்களில் பணம் நிரப்புவது வழக்கமாக நடைபெறக்கூடிய பணி என்பதால் திட்டமிட்டு இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார்  சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் முதலில் இரண்டு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பொழுதும் இவர்களை யாராவது பின் தொடர்ந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.  பகலில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று பகலில் இந்த கொலை சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.