செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள ஓரத்தி ஆற்றில் திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் ஏம்பளம் ஏறியில் அள்ளுவதாக ஒரத்தி காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதேபோல் ஓரத்தி காவல் எல்லைக்குட்பட்ட ஏம்பளம் ஏரியில் தொடர்ந்து ஏரி மண் திருடுவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக இரவு நேரங்களில் குறிப்பிட்ட சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.



இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒரத்தி போலீசார் ஏம்பளம் ஏரியில் டிராக்டர் மூலம் மணல் அள்ளுவதை கண்டு அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர், அப்போது ஏறியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த வடமணிபாக்கம் திமுக கிளைச் செயலாளர் வடிவேலு என்பவர் போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாரித்துக் கொண்ட போலீசார், அவரை மடக்கி பிடிப்பதற்காக முயற்சி செய்தபோது அங்கிருந்து வடிவேல் தப்பி ஓடி உள்ளார்.




 

இதனைத் தொடர்ந்து மண அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியோடிய திமுக கிளை செயலாளர் வடிவேலுவை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், மதுராந்தகம் அருகே பதுங்கி இருந்த வடிவேலுவை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒரத்தி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, வடிவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

மேலும் வடிவேலிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏரியில் உள்ள மண்ணை அடிக்கடி வடிவேல் திருட்டுத்தனமாக டிராக்டரின் கடத்தி விற்பனை செய்து வருவதே காவல்துறையினர் உறுதி செய்தனர். வடிவேலின் டிராக்டரை பறிமுதல் செய்து ஒரத்தி காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.




திமுக பிரமுகர் ஒருவர் மண் அள்ளிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது, ஒரத்தி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X