செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும்போது தனியார் நிறுவன காவலாளி 37 லட்சத்துடன் மாயம். 8மணி நேரத்தில் கைது செய்து அசத்திய கூடுவாஞ்சேரி போலீசார்
தனியார் ஏடிஎம்
வேளச்சேரியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் நேற்று காலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை மேலாளர் ராஜசேகர் தலைமையில், மது பிரசாத், ஓட்டுநர் மகாலிங்கம் மற்றும் இவர்களுடன் சென்ற குரூப் 3 தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர் குணசேகரன் ( 45 ) சென்று பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது இறுதியாக ஊரப்பாக்கத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப ராஜசேகர் மற்றும் மது பிரசாத் சென்றபோது ஓட்டுநர் தன் கைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை விட்டு சிறு தூரம் சென்றுள்ளார் .
37 லட்சம் மதிப்புள்ள பணப்பை
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட குரூப் 3 செக்யூரிட்டி பாதுகாவலர் குணசேகரன்ர் 37 லட்ச ரூபாயுள்ள ஒரு பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினார். ஓட்டுநர் மகாலிங்கம் மற்றும் பணம் நிரப்ப சென்ற ராஜசேகர் மற்றும் மது பிரகாஷ் வந்து வாகனத்தில் பார்த்தபோது குணசேகரன் காவலாளி காணவில்லை. சந்தேகமடைந்த மூவரும் பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ. 37 லட்சத்தை காணவில்லை என்பதை தெரிந்து கொண்டனர். உடனடியாக வேளச்சேரியில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர் அரவிந்தனிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் .
சுற்றி வளைத்த தனிப்படை போலீஸ்
தகவல் அறிந்த அரவிந்தன் விரைந்து வந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணத்துடன் தப்பிச்சென்ற குணசேகரன் மீது புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகர துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நான்கு பிரிவுகளாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் காவலாளியின் செல்போன் என்னை வைத்து ஆய்வு செய்ததில் திருவான்மியூர் பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருந்த குணசேகரனை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் வெளி மாநிலத்திற்கு தப்பி சென்று உல்லாச வாழ்க்கை அனுபவிக்க காவலாளி முடிவு செய்து செய்திருந்ததாக தெரியவந்தது
8 மணி நேரத்தில் போலீசார் திருடு போன பணப்பையுடன் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் தெரிவித்த 8 மணி நேரத்தில் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பணப்பயையும் மீட்டெடுத்தார் காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
காவல்துறையினர் சுற்றி வளைத்தது எப்படி ?
சம்பந்தப்பட்ட காவலாளி தான் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறார் என போலீசாருக்கு சந்தேகம் உறுதியானது தொடர்ந்து அவரது தொலைபேசி எண் டவர் லொகேஷன் வைத்து தேட துவங்கினர். மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் அனைத்து தனியார் ஹோட்டல்களும் உஷார் படுத்தப்பட்டனர். இந்தநிலையில் தான் தனிப்படை போலீசார் வெளியில் தப்ப விடாமல் சுற்றி வளைத்து காவலாளியை கைது செய்தனர். தனது கடமையை காவலாளி செய்யாமல், வேலி பயிரை மேய்ந்த கதையாக மாறிய காவலாளி தற்பொழுது , சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்