குறிப்பிட்ட ஒரு பிரிவினரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட பிக்பாக் முன்னாள் போட்டியாளரும் துணை நடிகையுமான மீரா மிதுன் மீது விசிக உள்ளிட்ட பல்வேற தலித் அமைப்புகள் சார்பில் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் புகார்கள் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று ஆஜராக சம்மனும் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புதிய வீடியோ ஒன்றை மீரா மிதுன் வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திரே மோடிக்கும் ஆங்கிலத்திலும், முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிலும் கோரிக்கை வைப்பதாக நினைத்து கட்டளை போடும் விதமாக பேசியுள்ளார். இதோ அதன் விபரம்:
பிரதமருக்கு பேசிய ஆங்கில பேச்சில் உள்ளவை
ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்கிறது. தமிழ்நாட்டு பெண்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கின்றனர். தவறான தகவல்கள் மூலம் எனது பெயரை கெடுக்கும் வேலைகள் கடந்த 5 ஆண்டுகளாக நடக்கிறது. தமிழ் சினிமா விபச்சார கூடாரமாக உள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து டார்க்கெட் செய்யப்படுகிறேன். தமிழ் பெண்ணாக நான் நிறைய சவால்களை சந்தித்து வருகிறேன். நான் சினிமாத்துறையால் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறேன். இங்கு தமிழ் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எளிதாக அரங்கேற்றப்படுகிறது. நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினுக்காக பேசிய தமிழ் வீடியோ!
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே... நான் நிறைய புகார் கொடுத்திருக்கேன். என்னை பற்றி கடந்த 5 ஆண்டுகளில் தவறாக பேசுகிறார்கள். சைபர் கிரைம் அதை கண்டுகொள்ளவில்லை. இப்போது என்னை கைது செய்ய பிரசாரம் செய்கிறார்கள். இதை உடனே நிறுத்துங்க. என்னோட வீடியோவில் நான் தெளிவா பேசியிருக்கேன். எனக்கு சொந்தரவு செய்தவர்களை தான் நான் பேசுனேன். ஆனால் அது தவறாக வெளியே போகிறது. அந்த சாதியை சேர்ந்த எல்லோருக்கும் நான் வாய்ப்பளிச்சிருக்கேன். அதே வீடியோவில் தொந்தரவு செய்வோர் குறித்தும் கூறியிருக்கிறேன். இதற்கு நாடே போர்களமா வெடிச்சு... மீரா மீதுனை அரெஸ்ட் பண்ணனும்னு சொல்றாங்க. ஓகே அரெஸ்ட் பண்ணுங்க. காந்தி, நேரு ஜெயில்க்கு போகலையா. 5 வருசமா இதை தான் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு அப்படி ஒரு நிலை வராது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே வெற்றி பெற்ற ஒரு தமிழ் பெண் என்பதால் எனக்கு தொந்தரவு தருகிறார்கள். நான் ஒரு தமிழ் ஜாதி(?) பெண். நான் முன்னுக்கு வர கூடாது என நான் முன்னேறினாலும் எனக்கு எதிரான தடை தருகிறார்கள். அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கனும். அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் உட்கார்ந்து எனக்கு எதிரா கொச்சை கொச்சையா பேசுறாங்க. நரேந்திர மோடியோட எல்லைக்குள்ள இருந்தால் இப்படி பேச முடியாது. ஒரு பெண்ணை ஆண்கள் இவ்வளவு இழிவா பேசுறதே பெரிய வன்கெடுமை. முதல்வர் அவர்களே என் குடும்ப பாதுகாப்பு, எனது பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுங்க. இந்த மாதிரி என்னை பேசுவதே பெரிய கர்மா. தமிழ்நாடு என்னோட மண்... இந்த மண்ணை விட்டு நான் போகமாட்டேன். தமிழ் பெண் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் நான் ஜெயிச்சுட்டு தான் இருக்கேன் என்பதை மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேலயே அவ்வளவு கேஸ், அவ்வளவு வன்கொடுமை பண்ணாங்க. மக்களே ஒரு தமிழ் பெண் வளர்ச்சியடைவது தமிழ்நாட்டில் யாருக்கும் பிடிக்காது. வேற்று மாநில பெண்கள் மட்டுமே இங்கே வளர்ச்சியடைய முடியும்.
இங்குள்ள ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எனக்கு ஏன் பிரச்னை வருதுன்னா... எல்லா ஆண்களும் என் மீது ஆசைப்படுவதால் தான். யாரும் இதுவரை தமிழ் பெண் இமாலய வெற்றி பெற்று, எழுச்சி பெற்று பார்க்கல. ஏன் இதெல்லாம் நடக்குதுனா... அவள் வெற்றியாளர். அவள் மீதான பொறாமை காரணமாக அவளை தடுக்கிறார்கள். ஒரு தமிழ் பெண் வளர்ச்சி அடைவதை யாராலும்... எவனாலும்... தடுக்க முடியாது. ஒரு பெண்ணை இழிவாக பேசியதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை கைது செய்வது என்பது நடக்காத ஒன்று. கடந்த 5 ஆண்டுகளா இதை நான் பார்த்துட்டு இருக்கேன்.