• இந்தியாவில் ஜி.எஸ்.எல்.வி., எஃப்10 ராக்கெட் பயணம் தோல்வி. வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் க்ரையோஜனிக் என்ஜினில் கோளாறு.




  • நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தொடர் அமளி, குழப்பம் மற்றும்  கோஷங்களின் சத்தம் காரணமாக தூக்கமற்ற இரவுகளை கடந்து சென்றதாக மாநிலங்களைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று உருக்கமாக பேசினார். சில எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் மாண்புகளை அளித்துவிட்டதாகவும் தெரிவித்தார். " கோயிலின் கருவறைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோன்று,  ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும்  நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மையை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால், இந்த புனிதத் தனிமையை நேற்று எதிர்க்கட்சிகள் சீரழித்து விட்டனர். சில எம்பி-க்கள் மேஜை மீது ஏறி கோஷமிட்டனர். சிலர் அவையின் மையப்பகுதிக்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதுபோன்ற நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு மேல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை” என்று தெரிவித்தார்.

  • எதிர்கட்சியினர் அமலியால் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர். 


  • ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை  மாநில அரசுகளே தயாரித்துக்கொள்ள அனுமதி வழங்கும் 127 சட்டத்திருத்த மசோதா மாநிலங்களையில் நேற்று நிறைவேறியது.

  • ஏடிஎம் மிஷன்களில் பணத்தை நிரப்பாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து கவலைப்பட்ட ரிசர்வ் வங்கி, அத்தகைய இயந்திரங்களில் சரியான நேரத்தில் பணத்தாள்களை நிரப்ப தவறியதற்காக வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் முதல் ஏடிஎம்களில் மொத்தமாக 10 மணிநேரம் பணமில்லாமல் இருந்தால் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அபராதம் விதிக்கத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • போக்குவரத்துறை அமைச்சராக பண மோசடி செய்த வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறையில் ஆஜராக ஒருமாத காலம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் நேற்று ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.


  • செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்ததன் அடிப்படையில், பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க.,வின் தயார் நிலை தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கேட்பு. 

  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரெய்டு விவகாரத்தில் அவருக்குச் சொந்தமான மேலும் சில இடங்களில் சோதனை. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்.

  • சென்னையில் இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சுதந்திரதின விழா ஒத்திகையை முன்னிட்டு நடவடிக்கை. 

  • நீலகிரி, கோவை தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது. சென்னையில் பரவலாக மாலை மிதமான மழை பெய்தது.

  • இந்தியா -இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.