மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோயில்களும், நவகிரக ஸ்தலங்களும் உள்ளன. மேலும் பல காவல்நிலையம், நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், என அரசு அலுவலகங்கள், ஏராளமான திருமண மண்டபம், திரையரங்குகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் என நூற்றுக்கணக்கான கிராம புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நகராக சீர்காழி விளங்கி வருகிறது.
இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் ஹோட்டல் சோழா இன் என்ற தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சீர்காழி நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு வருபவர்கள் தங்குவதற்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து திருமண விழாவிற்கு வருகை புரிந்த தந்தை, இரண்டு மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
13.2 கிமி நீட்டிக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ; 22 நிமிடத்தில் பயணிக்கலாம்.. பிரதமர் திறந்துவைக்கிறாரா?
முதலில் வந்த தந்தைக்கும், ஒரு மகனுக்கும் இரண்டு அறைகளை எடுத்துக்கொண்டு பின்னால் வரும் தனது மூத்த மகனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறையின் சாவியை விடுதியின் வரவேற்பு அறையில் கொடுத்து விட்டு நேற்று மாலை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது தாமதமாக வந்த குடும்பத்தினர் ரூம் சாவி கேட்டபோது விடுதியில் பணியாற்றிய ஊழியர் சாவி தங்களிடம் இல்லை என்றும், உறவினர்கள் எடுத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு நிகழ்ச்சிக்கு செல்லும் அவசரத்தில் சென்னையில் இருந்து வந்த பெண்களுக்கு விடுதி ஊழியர் வேறு ஒரு அறையில் உடைகளை மாற்ற கொள்ள அனுமதித்துள்ளனர்.
அப்போது அந்த அறையில் சிசிடிவி கேமரா இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பதறிப் போன பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர். தகவல் கேட்டு திருமண நிகழ்ச்சியில் இருந்து விடுதிக்கு விரைந்துவந்து, இது குறித்து விடுதி ஊழியரிடம் கேட்டபோது அவசர அவசரமாக சிசிடிவியை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் வரவேற்பு அறையில் இருந்த டிவி உள்ளிட்ட பொருட்களை உடைத்து பிரச்சினையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு சம்பந்தப்பட்ட விடுதி ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சீர்காழி நகர் பகுதியில் அமைந்துள்ள விடுதி அறையில் சிசிடிவி கேமரா இருந்த சம்பவம் சீர்காழி மற்றும் இன்றி இந்த விடுதியில் தங்கி சென்ற அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற