Crime: உத்தரப்பிரதேசத்தில் லஞ்ச வழக்கில் கைதான ரயில்வே அதிகாரி வீட்டில் இருந்து ரூ. 2.61 கோடியை சிபிஐ பறிமுதல் செய்துள்ளனர். 


உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் நகரில் வடகிழக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை பொருள் அதிகாரியாக இருந்தவர் ஜோஷி.  உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் நகரில் வடகிழக்கு ரயில்வேக்கு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் ஒப்பந்ததாரர் ஒருவர் சிபிஐயிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் நகரில் வடகிழக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை பொருள் அதிகாரியாக ஜோஷி என்பவர் உள்ளார். அவர் என்னிடம் ரூ. 7 லட்சம் லஞ்சம் தரவேண்டும். இல்லையென்றால் ஒப்பந்ததை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். இதுகுறித்து விசாரணை நடத்தி அவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரியிருந்தார். 


இதையடுத்து சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்தியதில் ஜோஷி பணம் கேட்டது உண்மை என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அப்போது சிபிஐ ஜோஷியிடம் ரூ. 3 லட்சத்தை லஞ்சமாக கொடுக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கூறினர். அதன்படி நேற்று முன் தினம் ஒப்பந்ததாரர் ஜோஷியை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர சொன்னார். ஜோஷி வந்து பணம் வாங்கும்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக ஜோஷியை கைது செய்தனர். 






இதைத்தொடர்ந்து ஜோஷிக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ. 2.61 கோடியை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.




மேலும் படிக்க 


Nipah Virus: அச்சுறுத்தும் நிபா: மாஹேவில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு