5வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ. 60 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே 4 வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில் 5வது வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். 


கால்நடைத் தீவன ஊழல் ( Fodder Scam) என்பது பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஊழல் ஆகும். பீகாரில் 1990-ஆம் ஆண்டு முதல்வராகப் பதவி வகித்த லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் கால்நடைத் தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து உரிய விசாரணை கோரி வழக்குரைஞர்கள் சிலர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக நடுவண் புலனாய்வுச் செயலகம் (சிபிஐ) விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் சுமார் 13 ஆண்டுகள் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்தன. 


முதலாவதாக, 37.67 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான சாய்பாசா கருவூல வழக்கில் லாலு கடந்த 2013ம் ஆண்டு  5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. 








இரண்டாவதாக, ரூ.89.27 லட்சம் மோசடி தொடர்பான தியோகர் கருவூல வழக்கில்  கடந்தா 2017ம் ஆண்டு லாலு பிரசாத யாதவுக்கு 3.5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கி நீந்திமன்றம் உத்தரவிட்டது.  


மூன்றாவதாக, ரூ.33.67 கோடி ருபாய் நிதி ஏய்ப்பு தொடர்பான மற்றொரு கருவூல வழக்கில் லாலுவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


நான்கவாதாக, ரூ.3.5 கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பான தும்கா கருவூல வழக்கில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது, அனைத்து வழக்குகளிலும் இருந்து பிணை பெற்று சிறைக்கு வெளியே வாழ்ந்து வருகிறார்.     






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண