இதோ அதோ என ... ஒரு வழியாக இறுதிநாளை அறிவித்து, பிப்ரவரி 24ம் தேதி வலிமை ரிலீஸ் ஆவதாக அறிவித்தார், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கடந்த பொங்கல் அன்று, வலிமை வெளியாக இருந்த நிலையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காரணம் காட்டி, ரீலீஸ் வாபஸ் பெறப்பட்டது.


இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழக்கமான சூழல் நிலவுவதால், அடுத்து எப்போது வேண்டுமானால் ஊரடங்கு வரலாம் என்கிற ஐயத்தில், விசேஷ நாளுக்காக காத்திருக்காமல், பிப்ரவரி 24ல் ரீலீஸ் தேதியை அறிவித்தார் போனி கபூர். ஆனால், உண்மையிலேயே அந்த நாளை விசேஷ நாளாக மாற்றி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.


3 ஆண்டுகளாக காத்திருந்த வெறியை , தங்கள் ஆர்வத்தை ஆர்ப்பரித்து வெளிக்காட்டி வருகின்றனர். வலிமை, உலகளாவிய அளவில் அதிக திரையங்களில் வெளியாகம் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்கான விற்பனையை ஜோராக முடித்திருக்கிறார் போனி கபூர். 
ஆன்லைன் புக்கிங் தொடங்கியதுமே, அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை வலிமை ஜூரம் துரத்திக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் போட்டி போட்டி டிக்கெட் புக் பண்ணுவதிலும், கட்அவுட் வைப்பதும் அஜித் ரசிகர்கள் போட்டிக் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர் வாசலில் காத்திருந்து, கதவை திறந்தும் முண்டி அடித்து டிக்கெட் வாங்கும் அஜித் ரசிகர்களின் வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 




இதுவும் அப்படி ஒரு வீடியோ தான. சென்னை தி.நகர் கிருஷ்ணவேனி தியேட்டரில், வாசலில் காத்திருந்த அஜித் ரசிகர்கள், முன்பதிவு தொடங்கியதும், கதவு திறக்கப்பட்டதும், அங்கிருந்து ஒருவரை ஒருவர் முண்டியத்து ஓடும் காட்சி வெளியாகியுள்ளது. வரிசை நிற்பதற்கு தான் அந்த ஓட்டம் என்பதும், அதன் பின் தியேட்டரில் பல மணி நேரம் வரிசையில் நின்று அவர்கள் டிக்கெட் வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. 


அஜித் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து ஓடும் விடியோ காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்!


அஜித் ரசிகர்களின் இந்த ஆர்வத்தால், தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ்புக் ஆகி வருகிறது. வியாழன் அன்று ரிலீஸ் ஆகும் வலிமை, இந்த வாரத்தின் ஞாயிறு வரை பரபரப்பாக புக் ஆகி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண