Crime : அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே கொலை...! சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்..! வைரல் வீடியோ..!

அமிர்தரசரசில் உள்ள புகழ்பெற்ற பொற்கோவில் அருகே நிகாங் சீக்கியர்கள் ஒரு இளைஞரை கொலை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

  பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது அமிர்தசரஸ். இங்கு புகழ்பெற்ற கோல்டன் டெம்பிள் எனப்படும் பொற்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அடுத்த தெருவில் நடைபெற்ற கொலை ஒன்றின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இந்த வீடியோவில் ஒரு நபருக்கும், இரண்டு சீக்கியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறுகிறது. இந்த கைகலப்பின் இறுதியில் சீக்கியர்கள் தங்களிடம் இருந்த கூரிய ஆயுதத்தால் அந்த நபரை கொலை செய்கின்றனர். இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து மேற்கொண்ட விசாரணையில் கொல்லப்பட்ட நபரின் பெயர் ஹர்மன்ஜித்சிங் என்று தெரியவந்துள்ளது.


உயிரிழந்த ஹர்மன்ஜித்சிங் குட்கா மற்றும் மதுபோதையில் இருந்தததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியே வந்த நிஹாங் சீக்கியர்கள் எனப்படும் சீக்கியர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியே ராமன்தீப்சிங்கும், அவரது நண்பரும் இணைந்து ஆத்திரத்தில் ஹர்மன்ஜித்சிங்கை கொலை செய்துள்ளனர்.

அப்போது, ராமன்தீப்சிங்கும், அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து தங்கள் கைகளில் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். ஆனாலும், ஹர்மன்ஜித்சிங்கும் அவர்களை எதிர்த்து சண்டையிட்டார். அப்போது, மற்றொரு நபர் ஒருவரும் இணைந்து ஹர்மன்ஜித்சிங்கை சரமாரியாக தாக்கினார். இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த ஹர்மன்ஜித்சிங் உயிரிழந்தார்.  


இந்த காட்சிகள் அனைத்தும் கொலை நடைபெற்ற ஹோட்டல் அருகே இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. ஹர்மன்ஜித்சிங்கிடம் அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து, கொலை செய்த சம்பவத்தை ஹோட்டல் அருகே நின்று கொண்டு பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. கொலை சம்பவத்தை பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹர்மன்ஜித்சிங்கை கொலை செய்த கொலையாளிகளில் ராமன்தீப்சிங்கை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிகாங் சீக்கியர்கள் எப்போதும் நீல நிற உடையில் கையில் வாளுடன் உலா வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ஆன்லைன் காதல்! நாடு விட்டு நாடு சென்று காதலனை நேரில் சந்தித்த இளம்பெண் கொடூர கொலை!

மேலும் படிக்க : Crime: ஆன்லைனின் பறிபோன பணம்.. நண்பர்களிடம் கடன்...படம் பார்த்து கொள்ளையனாக மாறிய இன்ஜினீயர்!

Continues below advertisement
Sponsored Links by Taboola