தஞ்சாவூர் மாவட்டம் , பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பிறந்து வளந்தவர் நடிகரும் அரசியல் பிரமுகருமான கருணாஸ். கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான , நந்தா திரைப்படம் மூலம் லொடுக்கு பாண்டியாக சினிமா துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு காதல் அழிவதில்லை , பாபா, வில்லன் , குத்து, பிதமாகன் என பல படங்களில் காமெடியனாக களம் கண்டிருக்கிறார். நடிகராக மட்டுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் , பாடகர் என பன்முக அவதாரம் எடுத்தவர் கருணாஸ். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கும் கருணாஸ் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து பதிவு செய்துள்ளார்.
சினிமாவை பொருத்தவரை கருணாஸிற்கு சர்வைவல் மட்டும்தானாம் . ஆரம்ப நாட்களில் ஹோட்டல் விடுதியில் தங்கியிருந்த கருணாஸ் , பக்தி பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். சீசனுக்கு ஏற்ற மாதியான பக்தி பாடல்களை எழுதுவாராம். ஆடி மாதம் வந்தால் அம்மன் பாடலை எழுதி இசையமைப்பாராம். அந்த பாடல் வரிகள் அனைத்தையும் பக்தி பாடல் புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொள்வாராம். அப்போது பாடலுக்கு 100 ரூபாய் கிடைக்குமாம். இது தவிர கோரஸ் பாடுவதற்கு கருணாஸை தளபதி என்பவர் அழைத்து செல்வாராம் . ஒரு பாடலுக்கு 50 ரூபாய் கிடைக்குமாம்.
10 பாடலுக்கு 500 ரூபாய் கிடைக்குமாம். எனது ஆரம்பம் இப்படியாகத்தான் இருந்திருக்கிறது. பாலா என்னை காமெடியனாக அறிமுகப்படுத்தியதால்தான் நான் கமெடியன் ஆனேன். என்னை குணச்சித்திர நடிகராக அறிமுகம் செய்திருந்தால் நான் கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறியிருப்பேன் என்னும் கருணாஸ், நந்தனம் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும்பொழுதே நுங்கம்பாக்கம் ரஞ்சித் ஹோட்டலில் ரூம் பாயாக வேலை செய்தாராம்.
அப்போது ஹோட்டல் முதலாளி ஒரு மலையாளியாம். அவர் கருணாஸின் கடின உழைப்பை பார்த்து பாராட்டினாராம். மேலும் இதைவிட சிறப்பான வேறு வேலை செய்கிறாயா அல்லது ஊதியம் உயர்வு வேண்டுமா என கேட்டாராம். அதற்கு கருணாஸ் , தான் ஈவினிங் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன் . அதற்கு ஏற்ற மாதிரியாக வேலையில் ஷிஃப்டை மட்டும் மாற்றிக்கொடுங்கள் என கூறியிருக்கிறார்.
வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவேன் என எனக்கு அப்போதே தெரியும் என கூறும் கருணாஸ் , கல்லூரிக்கு செல்லவில்லை என்ற குறையும் இருக்க கூடாது என்பதற்காகவே படித்தாராம். இறுதியாக தன்னுடைய அடையாளத்தை மறைத்து வேறு அடையாளத்தை தேட நினைப்பதைவிட கேவலம் வேறு எதுவும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.