பிரஸ்ஸல்ஸில் ஒரு நபர் வேண்டுமென்றே ஒரு பெண்ணை ஓடும் சுரங்கபாதை ரயிலின் முன்பு தள்ளிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை பெல்ஜியம் தலைநகரில் உள்ள ரோஜியர் மெட்ரோ நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கீழே விழுவதை பார்த்து சிறிது நேரத்தில் ரயில் நின்றதால் அந்தப் பெண் எந்தவொரு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெண்ணை ரயில் முன்பு தள்ளுவதற்கு முன்பாக அந்த நபர், வெகுநேரமாக பதற்றமாக இருந்துள்ளார். அந்த பதட்டத்தை போக்க அந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறிது நேரம் அங்கும் இங்கும் உலா வருவதையும் அந்த வீடியோ காட்சிகளில் நம்மால் காண முடிகிறது. ரயில் வருவதற்கு சிறிது நேர இடைவேளையில் அந்த நபர் தீடிரென ஓடி வந்து அந்த பெண்ணை பின்னால் சென்று வேகமாக தள்ளுகிறார்.
இதனால் நிலைதடுமாறிய அந்த பெண், நேராக மெட்ரோ ரயில் வேகமாக செல்லும் பாதையில் விழுகிறார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த ரயில் ஓட்டுநர் அனிச்சையாக அவசரகால பிரேக்கை இழுத்து அந்த பெண்ணின் உயிரை காப்பற்றியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு உதவ விரைந்து, அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்.
இந்தநிலையில், அந்த பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிட்டு தப்பிசென்ற நபரை மற்றொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது மனநிலை குறித்து சரிபார்க்க மனநல மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்