மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் 44 வயதான குமார் மற்றும் அவரது தம்பி 41 வயதான வீராச்சாமி இருவரும் கட்டடம் கட்டும் தொழிலாளிகளாக வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
Thalapathy 67 Update: விஜய் பிறந்தநாள் கிஃப்ட் வந்தாச்சு..வெளியானது தளபதி 66 படத்தின் அப்டேட்.!
இந்நிலையில் இவர்கள் இருவரும் உறவினர் சித்தர்காடு கலைஞர் நகர் சம்பந்தம் குளம் பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் வீட்டில் வினோத்துடன் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது குமார் மற்றும் அவரது தம்பி வீராச்சாமி இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த தம்பி வீராச்சாமி தனது அண்ணன் குமாரை சென்டரிங் வேலைக்கு பயன்படுத்தும் கடப்பாறையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் குமார் நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
CUET PG 2022: முதுகலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு.. விவரம்!
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக குமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இறந்த குமாரின் மனைவி ராதிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். பேரை பெற்ற மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வீராசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுபோதையில் தம்பி அண்ணனை அடித்துக் கொலை செய்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடர்ந்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி பல்வேறு பட்ட மக்களும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதுகுறித்து செவி சாய்க்காது, மது விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மது விற்பனையால் மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்கி பெரு விபத்துக்களை ஏற்படுத்தி பல உயிர்களை காவு வாங்கி வருவதாகவும், அதுமட்டுமின்றி மதுபோதையில் ஏற்படும் பிரச்சினையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ந்து வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் வரும் வருவாய்க்கு மாற்று வழி செய்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.