மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் மகனும், தந்தையும் ஒன்றாக பங்கேற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் குடும்பத்திற்கு மகிழ்ச்சி, சோகம் கலந்த நிகழ்வாக மாறிவிட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தேர்வில் தோல்வி; தந்தை பாஸாகி விட்டார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் (Maharashtra State Board of Secondary and Higher Secondary Education)கடந்த 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது.  


இதில் புனேவில் பாபசாகேப் டயஸ் பைலட் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் வாக்மெரே(Bhaskar Waghmare) தனது 43-வது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.  குடும்ப சூழல் காரணமாக 7-வது வகுப்பு படித்துவிட்டு படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் பணி செய்ய தொடங்கியிருக்கிறார். அவருக்கு எப்படியாவது படித்துவிட வேண்டுமென என்ற ஆர்வம் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால்,  30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடிவெடுத்தார். இந்தாண்டு இவருடைய மகனும் 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.


ஆனால், தேர்வு முடிவுகளில் தந்தை பாஸாகிவிட்டார். மகன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், ஒரு பக்கம் 30 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை பாஸாகிவிட்டார் என்பதை எண்ணி மகிழ்வதா, இல்லை மகன் தேர்ச்சி பெறவில்லையே என வருந்துவதா என்று அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை.


இது குறித்து மகன் கூறுகையில், அப்பாவுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே இருந்திருக்கிறது. அவர் தான் நினைத்தை செய்திருக்கிறார், அதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் வரும் தேர்வில் நன்றாக எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவேன்.” என்றார்.


மகாராஷ்டிரா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 96.94 சதவீதமாக இருந்தது. கொன்கன்( Konkan) பகுதி அதிக தேர்ச்சி விகிதமாக 99.27 ஆக பதிவு செய்திருந்தது. நாசிக் பகுதியில் 95.90 சதவீதம் எடுத்து மாநிலத்தில் குறைந்த தேர்ச்சி விகிதமாக பதிவு செய்திருந்தது.


இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்தாண்டில் நடைபெறும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படும் தேர்வை எழுதலாம் என்று அம்மாநில பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண