Beast Villain Speech : விஜய் மூஞ்சில ரியாக்‌ஷனே இல்லை.. வார்த்தையை விட்ட பீஸ்ட் வில்லன்! கொதித்த ரசிகர்கள்!

பீஸ்ட் படமே தமிழ் சினிமாவுக்கு நல்ல என்ட்ரீயாக அமையவில்லை என்று அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் டாம்ஷைன் சாக்கோ பேசியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய், இவரது நடிப்பில் உருவாகிய திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தோல்விப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வில்லனாக மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ அறிமுகமாகியிருந்தார்.

Continues below advertisement

இந்த நிலையில், பீஸ்ட் படம் குறித்து டாம்ஷைன் சாக்கோ அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டி ஒன்றில் பீஸ்ட் படம் குறித்தும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் டாம்ஷைன் சாக்கோவிடம் கேட்கப்பட்டது.  பீஸ்ட் படம் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரீயானது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு டாம் ஷைன் சாக்கோ மிகவும் கிண்டலாக, “ தமிழ் சினிமாவுக்கே பீஸ்ட் படம் நல்ல என்ட்ரீயாக அமையவில்லை. நான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களைத்தான் பார்த்தேன்.” என்றார்.



மேலும், அவர் நடிகர் விஜய் குறித்து பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் “  ஒருவரை அடித்து தூக்கி வரும்போது அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வரும் நபரின் முகத்தில் ரியாக்ஷன் இருக்க வேண்டும். அதாவது, அவர் சிரமப்படுவது போன்று காட்சி இருக்க வேண்டும். ஆனால், படத்தில் ஒரு பேப்பரைத் தூக்கி வருவது போல விஜய் என்னைத் தூக்கி வருவார். இதற்காக, விஜய் சாரை குறை சொல்ல முடியாது. ஆனால், படக்குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு விஜய் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் வில்லனாக நடித்து வேறு மொழியில் அறிமுகமாகிய படத்தை பற்றி இவ்வாறு கிண்டலாக விமர்சித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடிகர் டைக்கோ ஷான் சாக்கோவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் ஷான்சாக்கோவை பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் கயிற்றில் கட்டி தூக்கி வருவதுபோல காட்சி அமைந்திருக்கும். இந்த காட்சி பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது. அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் விமானம் ஓட்டும் காட்சிகளும் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் படத்தை அவரது படத்தில் வில்லனாக நடித்த நடிகரே இன்னும் பார்க்கவில்லை என்றும், அந்த படத்தை கேலி செய்வது போல பேசியிருப்பதும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement
Sponsored Links by Taboola