Crime: பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தனது மகளை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகளை துண்டு துண்டாக கொலை செய்த தாய்:


பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 30 வயதான ரூத் ஃப்ளோரியானோ. இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  இவர் கணவரை பிரிந்து டேட்டிங் செயலி மூலம் ஒரு நபரை சந்தித்துள்ளார். பின்னர், அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இருப்பினும்,  ரூத் ஃப்ளோரியானாவின் குழந்தைகளில்  சில்வா என்ற 9 வயது சிறுமி மட்டும் தனது தந்தை வேண்டும் என்று பல முறை தாயிடம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. தந்தை தன்னிடம் பிரிந்ததை ஏற்றுக் கொள்ளாமல் பலமுறை தாய் ரூத்தியிடம் சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தந்தை தன்னிடம் பிரிந்ததை ஏற்றுக் கொள்ளாமல் சிறுமி சில்வா மீண்டும் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தில் தாய் ரூத் ஃப்ளோரியானோ சிறுமி சில்வாவை கடுமையாக அடித்துள்ளார். பின்னர், அவரது மார்பில்  குத்தியுள்ளார். பின்னர், சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி  குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது சிறிதாக அப்புறப்படுத்தியுள்ளார். பின்னர், சில உடல் உறுப்புகளை சமைத்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த சம்பவம் குறித்த அறிந்த போலீசார் வீட்டிற்கு வந்து சோதனை செய்தனர். சோதனையில், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த சிறுமியின் உடல் பாகங்களை மீட்டுள்ளனர். அதன்பின், மேலும் இரண்டு குழந்தைகளை அழைத்து சென்றுள்ளனர். பின்னர், ரூத் ஃப்ளோரியானோ மீது வழக்குப்பதிவு செய்து ஆகஸ்ட் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 


போதையில் தாய் செய்த கொடூரம்:


இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ”முதலில் குழந்தையை கொலை செய்யவில்லை என்றும் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை" என்றும் கூறியுள்ளார். பின்னர்,  "எனது கணவர் பிரிந்ததை என் மகளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், நான் ஒருவருடன் பழக்கத்தில் இருந்தேன். இதுவும் என் மகள் ஏற்கவில்லை. ஆகஸ்ட் 8ஆம் தேதி எனது மகள் மீண்டும் தந்தை பற்றி கேட்டார்.


இதனால் நான் ஆத்திரத்தில் அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து கொஞ்ச கொஞ்சமாக அப்புறப்படுத்தினேன். மேலும், சில உடல் உறுப்புகளை சமைத்தேன்" என அவர் போலீசிடம் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தன்று ரூத் ரூத் ஃப்ளோரியானோ போதைப் பொருள் உட்கொண்டு அவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதற்கிடையில், மகளை கொலை செய்தபின், ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்து நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று இணையத்தில் தேடி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.