தன்னை காதலித்துவிட்டு வேறுஒரு நபரை திருமணம் செய்ய முயற்சித்த காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் சுட்டு காதலனும் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியபிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் 25 வயதான கிர்ராஜ் கட்டாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தான் அப்பெண்ணை காதலித்த போது அவருக்கு பொருளாதார ரீதியாகவும் பல்வேறு உதவிகளை கிர்ராஜ் செய்துள்ளார். கிர்ராஜை காதலித்து வந்த அந்த பெண்ணுக்கு திடீரென்று கடந்த ஏப்ரல் 21ம் தேதி வேறுஒரு ஆணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனால் கடும்கோபத்திலும், வருத்தத்திலும் கிர்ராஜ் இருந்ததாகக் கூறப்படுகிறது. 


இந்நிலையில், கிர்ராஜின் 21 வயதான காதலி தனது சகோதரியுடன் நேற்று இரவு மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த கிர்ராஜ், தான் கொண்டு சென்றிருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தன் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார். பின்னர் கோலா கா மந்திர் என்ற பகுதியில் குண்டடிபட்டுப் பிணமாகக் கிடந்துள்ளார். அப்பகுதியில் சோதனை செய்த காவல்துறையினர், அங்கிருந்து இரண்டு துப்பாகிகளை கைப்பற்றியுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குவாலியர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் 62 வயதான ஆண், 57 வயதான பெண் மற்றும் 12 வயதான சிறுமி ஆகிய மூன்று பேர் தங்கள் வீட்டு மாடியில் உறங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொடூரமான முறையில் இன்று கொலை செய்யப்பட்டனர்.


அதேபோல கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வனவிலங்கு வேட்டையை தடுக்க முயன்ற காவல்துறை துணை ஆய்வாளர் உள்பட 3 பேரை கடத்தல்காரர்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுட்டுக்கொன்றனர். உடனடியாக அவசரக் கூட்டத்தை கூட்டிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மெத்தனமாக செயல்பட்டதற்காக ஐஜி அனில்சர்மாவை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடியிருந்தார். 






இந்த நிலையில், தப்பியோடிய சோட்டு கான் ருதியா பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு நேற்று நள்ளிரவில் தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்யமுயன்ற போது இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் ஹரிபூர் காட்டுப்பகுதியில் உள்ள பாதாவுரி சாலையில் சோட்டு கான் சுட்டுக்கொல்லப்பட்டார். குவாலியரில் அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தான் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்ததால் விரக்தியில் காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு காதலனும் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.