தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ஈர்க்கக்கூடிய மற்றும் சிறந்த முறையில் செயல்பட்ட அமைச்சர் யார்? என்று  ஏபிபி சி வோட்டர் அரசியல் கட்சியினர் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தியது.


பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் :




நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் செயல்பாடு ஈர்க்கக்கூடியதாக இருப்பதாக தி.மு.க. கூட்டணியினர் 35.9 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணியினர் 23.6 சதவீதமும், அ.ம.மு.க.வினர் 31.3 சதவீதமும் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 40 சதவீதமும், நாம் தமிழர் கட்சியினர் 40 சதவீதமும், மற்றவர்கள் 36.4 சதவீதமும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம், 32.2 சதவீதம் பேர் பி.டி.ஆரின் செயல்பாடு ஈர்க்கக்கூடியதாக உள்ளதாக கூறியுள்ளனர்.


முதல்வரின் ஓராண்டில் எந்த அமைச்சரின் செயல்பாடுகள் உங்களை கவர்ந்துள்ளன ?



தங்கம் தென்னரசு:




தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசுவின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 9.2 சதவீதம் தி.மு.க.வைச் சார்ந்தவர்களும், 6.6 சதவீதம் அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்களும், அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 6.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் 6.7 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மற்றவர்கள் 9.1 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 7.9 சதவீதம் பேர் தங்கம் தென்னரசுவின் செயல்பாடு ஈர்க்கக்கூடிய வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.


அன்பில் மகேஷ் :




பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 20.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 12.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 12.5 சதவீதமும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 50 சதவீதம் பேரும், நாம் தமிழர் 20 சதவீதம் பேரும், மற்றவர்கள் 9.1 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 17.8 சதவீதம் பேர் அன்பில் மகேஷின் செயல்பாடு தங்களை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததாக கூறியுள்ளனர்.


மா.சுப்பிரமணியன் :




கொரோனா இரண்டாம் அலையின்போது சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மா.சுப்பிரமணியனின் செயல்பாடுகள் ஈர்க்கக்கூடிய வகையில் இருப்பதாக 10.9 சதவீதம் தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்களும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்களும் 30.2 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 31.3 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அதேபோல, மக்கள் நீதிமய்யத்தினர் 50 சதவீதத்தினரும், நாம் தமிழர் கட்சியினர் 20 சதவீதம் பேரும், மற்றவர்கள் 27.3 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் செயல்பாடுகள் தங்களை ஈர்க்கக்கூடிய வகையில் சிறப்பாக இருந்ததாக 18.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.


முழு கருத்துக் கணிப்பு விவரம் :



மேற்கண்ட யாருமில்லை:


மேற்கண்ட அமைச்சர்கள் யாருமில்லை என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 10.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 30.2 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 31.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 10 சதவீதம் பேரும், நாம் தமிழர் 20 சதவீதம் பேரும், மற்றவர்கள் 27.3 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 18.7 சதவீதம் பேர் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண