தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தது. அவற்றில் பிரதான அறிவிப்பாக இடம்பெற்றிருந்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், சிலிண்டர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 100, டீசல் விலை ரூபாய் 4 குறைப்பு ஆகியவை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
இதனால், தி.மு.க. அரசு மேற்கூறிய திட்டங்களில் எதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஏபிபி சி வோட்டருக்கு அரசியல் கட்சியினர் அளித்துள்ள கருத்துக்களை கீழே காணலாம்.
முதல்வரின் ஆட்சியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள்?
மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 :
மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டம் என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் ரூபாய் 29.3 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 27.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 16.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 30 சதவீதத்தினரும், நாம் தமிழர் 26.7 சதவீதத்தினரும், மற்றவர்கள் 30 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று மொத்தம் 27.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் :
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியினர் 15 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 12.1 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 5.6 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 20 சதவீதம் பேரும், நாம் தமிழர் 20 சதவீதம் பேரும், மற்றவர்கள் 10 சதவீதம் பேரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மொத்தம் 13.8 சதவீதம் பேர் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
சிலிண்டர்களுக்கு ரூபாய் 100 மானியம் :
சிலிண்டர்களுக்கு ரூபாய் 100 மானியம் வழங்குவோம் என்ற வாக்குறுதியை உடனே செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் 17.4 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 13.1 சதவீதம் பேரும், அ.ம.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 16.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 20 சதவீதம் பேரும், மற்றவர்கள் 10 சதவீதம் பேரும் இந்த கருத்தையே வலியுறுத்தியுள்ளனர். மொத்தம் 15.1 சதவீதம் பேர் சிலிண்டர்களுக்கு ரூபாய் 100 மானியம் வழங்கும் அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
டீசல் விலை ரூபாய் 4 குறைப்பு :
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த டீசல் விலை ரூபாய் 4 குறைக்கப்படும் என்பதை உடனே செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியினர் 26.3 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 22.2 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 16.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 20 சதவீதம் பேரும், நாம் தமிழர் 26.7 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மற்றவர்கள் 10 சதவீதம் பேர் இந்த திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தியுள்ளனர். மொத்தம் 23.8 சதவீதம் பேர் டீசல் விலை குறைப்பு அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
மேற்கண்ட எதுவுமில்லை :
மேற்கண்ட எதுவுமில்லை என்று தி.மு.க. கூட்டணியினர் 12 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 25.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 44.4 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 10 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 26.7 சதவீதம் பேரும், மற்றவர்கள் 40 சதவீதம் பேரும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மொத்தம் 19.4 சதவீதம் பேரும் மேற்கண்ட எதுவுமில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்