கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் குழு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 


சென்னை கட்டுப்பாட்டு மையத்துக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அந்த தகவல் வதந்தி என கண்டறியப்பட்டது. 


வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காவல்துறையினர் சென்னை கட்டுப்பாட்டு மையத்துக்கு போன் செய்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


கடலூரின் மையப்பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்திலேயே அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, அம்மா உணவகம், சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்டவையும் உள்ளன. அனைத்து விதமான வார்டுகளும் இம்மருத்துவமனையில் அமைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு ஒரு தகவல் வந்துள்ளது.


 அதில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.


 இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது, காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கூப்பருடன் சென்று அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, செவிலியர் பயிற்சி பள்ளி, பிரசவ வார்டு உள்ளிட்ட வார்டுகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்


இதனால், வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர்.


இந்த நிலையில் வெடிகுண்டு விடுத்த மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி லால்க்குடி பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பது தெரியவந்துள்ளது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண