ஒரு தல காதல் காரணமாக பல்வேறு நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. ஒரு சில சமயங்களில் கொலை முயற்சி வரை சென்றுவிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 9-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆண் ஒருவர் கழுத்தில் சுட்டு கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பீகார் மாநிலத்தின் பாட்னாவின் பேஹூர் பகுதியில் ஒருவர் காய்கறி கடையை நடத்தி வருகிறார். இவருடைய 15வயது மகள் ஒரு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் ஒரு தல பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதை அந்த மாணவி ஏற்று கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த நபர் மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக கருதப்படுகிறது. 






இதற்காக அவர் பட்டபகலில் அந்த மாணவி சாலையில் நடந்து வருவதை அறிந்து அவரை பின் தொடர்ந்துள்ளார். அப்போது அவர் தன்னுடன் நாட்டு துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. அந்த துப்பாக்கியை வைத்து அவர் அந்த மாணவியை கழுத்தில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சாலையில் நடந்து வரும் மாணவியை ஒரு சந்துக்குள் வைத்து அந்த நபர் கழுத்தில் சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் மிகவும் பதைப்பதைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. 


கேரளாவில் 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர்கள்:


கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தினந்தோறும் பள்ளிக்கு வந்து சோர்வாக இருந்துள்ளார். தினமும் இந்த மாணவி சோர்வாக இருப்பதை பார்த்து சந்தேகித்த ஆசிரியர் ஒருவர், உனக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காண்பிக்கவே, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வன்கொடுமை செய்யபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த மாணவியை அழைத்து வந்த ஆசிரியர்களிடமும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 


அந்த மாணவியிடம் தனியாக ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், அவர் தனது தந்தையின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சிறுமியின் ஆசிரியர்கள் குழந்தை உதவி மைய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் உள்ளூர் காவல்துறையை அணுகி நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண