மெக் டொனால்ட்ஸ் கடையில் ஃபிரெஞ்சு ஃப்ரைஸ்க்கு ரசீது தராததால் காவல்துறையை அழைத்த வாடிக்கையாளர் மிகப்பெரும் கொலை குற்றத்தில் சம்மந்தம் உடையவர் என்று அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஜியார்ஜியாவில் நடந்தேறி உள்ளது.


பலநாள் திருடன்


'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்', என்று நம்மூரில் சொலவடை உண்டு, அதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. பல நாட்களாக காவல்துறையை ஏமாற்றி வந்த நபர், அவரே எதிர்பாரா விதமாக சிம்பிளாக ஒரு ஃபிரெஞ்சு ஃப்ரைஸிற்காக மாட்டிக்கொண்டுள்ள அரிதான சம்பவம் நடந்துள்ளது.



ஃபிரெஞ்சு ஃப்ரைஸ்


அன்டைன் சிம்ஸ் என்ற 24 வயது நபர் மேக் டொனால்ட்ஸ் கடையில் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ரசீது கிடைக்காததால் அதிருப்தி அடைந்த அவர் கடை ஊழியர்களிடம் கத்தி உள்ளார். கடை ஊழியர்கள் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டும் அடங்காத அவர் கோபம் கொண்டு சண்டையிட தொடங்கி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: சூரியனுக்கும் வயதாகும்.. இறந்துபோகும்?! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஷாக் தகவல்கள்!


911-ஐ அழைத்த வாடிக்கையாளர்


உடனே நியாயம் கேட்படுபற்காக 911 எமெர்ஜென்சி நம்பருக்கு அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த காவலர்களிடம் புகாரை கூறுவதற்காக அருகில் சென்ற அவர், அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள துவங்குகிறார்கள் என்று அறிந்ததும் திடீரென ஓடத்துவங்குகிறார்.



தேடப்படும் குற்றவாளி


இந்த காட்சிகள் போலீசார் உடலில் மாட்டியிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இவர் 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு வழக்கிற்காக அழைப்பு விடுத்து வராமல் இருந்த குற்றவாளி அவர். பல ஆண்டுகளாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்து வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இருந்து நான்கு வருடங்கள் காவல்துறை கண்ணில் படாமல் இருந்த அவர் பிடிபடாமல் இருந்துள்ளார்.


கொலைக்குற்றம்


ஒரு பெண்ணின் உடலை காருக்குள் வைத்து எரித்த வழக்கு இவருடன் சேர்த்து இரண்டு பேர் மீது போடப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலைக் குற்றத்திற்காக கோர்ட் அழைத்த போது அவர் வராமல் இருந்திருக்கிறார். அப்போதிலிருந்து தேடப்பட்டு வரும் அவர் ஒரு ஃபிரெஞ்சு ஃப்ரைஸால் சிக்கிக்கொண்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.