பெங்களூரில் 36 வயதான பெண் ஒருவர், ஆபாச படங்களை பார்க்கும் கணவரை எதிர்த்து கேட்கும்போது, தன்னை துன்புறுத்துவதாகக் கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.அந்த நபர் பல்வேறு ஆபாச தளங்களுக்கு சந்தா செலுத்தியதாகவும், கால் கேர்ள்களுக்கு பணம் செலவழித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் இரவில் கால் கேர்ள்களுடன் அரட்டை அடிப்பதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

Continues below advertisement

வழக்கத்திற்கு மாறான ஒரு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆபாசத்திற்கு அடிமையான தனது கணவரின் பழக்கவழக்கங்களை எதிர்த்தற்காக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்.

Continues below advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகரைச் சேர்ந்தவர் செஸ்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது கணவரின் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கணவர் தன்னை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த பவனகுடி மகளிர் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுரேஷுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நவம்பர் 2019 இல் திருமணம் நடைபெற்றது என்று 36 வயதான பெண், தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர் வரதட்சணையாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கமும், ரூ.2 லட்சம் ரொக்கமும் பெற்றதாக கூறப்படுகிறது. 

சுரேஷின் ஆபாசப் பழக்கத்தை செஸ்தா அறிந்து கொண்டார். இரவில், அவர் கால் கேர்ள்களுடன் ஆன்லைன் அரட்டைகளில் ஈடுபடுவதை அவர் கண்டுபிடித்தார். ரமேஷின் பெற்றோரிடம், செஸ்தா இந்த விஷயத்தைப் பற்றி புகார் செய்தபோது, ​​தங்கள் மகனை சீர்திருத்த ஒரு வாய்ப்பை வழங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் தன்னை மாற்றிக்கொள்ளாவில்லை என்று கூறப்படுகிறது.

கணவர் தனது நடத்தையை எதிர்த்ததற்காக தன்னை துன்புறுத்தத் தொடங்கியதாகவும், பெற்றோர்களும் அவருக்கு ஆதரவாக இருந்ததாகவும் அப்பெண் மனுவில் கூறியுள்ளார். மேலும், அவர்கள் தன்னை பழைய உணவுகளை உண்ணும்படி வற்புறுத்தியதாகவும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைத்துச் செல்வதைத் தவிர்த்ததாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், அந்த பெண்,  கணவர் தனது புகைப்படங்களை கால் கேர்ள்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும், மேட்ரிமோனியல் இணையதளத்தில் கணக்கு தொடங்கி, அங்கு அவர் விவாகரத்து பெற்றவர் என்றும் காட்டியதாக கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண