பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது பெண், தனது வழிபாட்டு இல்லமான தேவாலயத்தில் பத்து வயதாக இருந்தபோது எட்டு பேர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சிவாஜி நகர் காவல் நிலையத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்குப் பிறகு தற்போது போலீசில் புகார் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டதில் தொடர்புடைய 8 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "பத்து வயதில், வேலைக்கு செல்வதற்கு முன், என் பெற்றோர் என்னை சர்ச்சில் விட்டுவிட்டு செல்வார்கள்.நான் தேவாலயத்திற்குள் விளையாடுவேன். சைமன் பீட்டர் (குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்) வந்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். சாமுவேல். டிசோசாவும் (மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவர்) தேவாலய வளாகத்தில் உள்ள சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, ஆபாசமான படங்களை காட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதையடுத்து, நான் சென்று சர்ச் செயலாளரான நாகேஷிடம் (மூன்றாவது குற்றவாளி) பேசினேன். அவர் எனக்கு உதவ, ஆனால் அவர் என்னை துஷ்பிரயோகம் செய்தார், என்னை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தார், என்னைத் தாக்கினார் மற்றும் "சர்ச்சின் நற்பெயரை கெடுக்காதே மற்றும் சர்ச்சின் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யாதே” என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட என்னைக் கட்டாயப்படுத்தினார். "இதற்கெல்லாம் பிறகு, நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போதுதான் வலுவாக முன்னின்று நீதிக்காக போராட முடிவு செய்தேன்" எனக் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தாய், "எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அவர்கள் இருவரும் மிகவும் சிறியவர்கள், பள்ளி நாட்களில் ஒன்றாக விளையாடியவர்கள். பாதிக்கப்பட்டவருக்கு எனது குடும்பத்தின் மீது மனக்குறைகள் உள்ளன, எனவே அவர் அதை காரணமாக்கி வழக்கு தொடுத்து என் குடும்பத்தைக் கெடுக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் டயாப்பர் மாற்றும் ஆண்கள் அறை வைக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
பொது இடங்களிலும் குழந்தைகள் அணிந்திருக்கும் டயாப்பர் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பெண்கள் தான் அதை செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் டயாப்பர் மாற்றுவதற்கான ஆண்கள் அறை பிரத்யேகமாக நிறுவப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுகதா என்ற பெண் சமூக வலைதளத்தில் டயாப்பர் மாற்றும் அறையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதோடு, “இதை நாம் கொண்டாட வேண்டும். டயாப்பர் மாற்றும் அறையை பெங்களூரு விமான நிலையத்தில் கண்டேன். குழந்தைகள் பராமரிப்பு என்பது பெண்களின் கடமை மட்டும் இல்லை” என்று கூறியிருந்தார்.