Bengaluru Crime: பெங்களூருவில் 9ம் வகுப்பு பயிலும் பெற்ற மகளுக்கு பெற்ற தாயே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை?

தவறாக முடிந்த பாலியல் கல்வி அல்லது பெற்றோரால் நிகழ்த்தப்படும் கொடுமைகளின் அடுத்த கட்டம் என குறிப்பிடும் அளவிற்கு பெங்களூருவில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி, 9ம் வகுப்பு மாணவி ஒருவர், திருமணத்திற்குப் பிறகு கணவருடன்  ஏற்படும் உடல் ரீதியான நெருக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பாடம் எடுப்பதாக பெற்ற தாயே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், தாயோ இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நடந்தது என்ன?

கண்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 45 வயது பெண்மணி, தனது இரண்டு மகள்களுடன் வடக்கு பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது இளைய மகள் தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், அங்கு வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது ஆலோசகருடன் கலந்துரையாடியபோது, தான் எதிர்கொண்டு வரும் பிரச்னையை மாணவி வெளிப்படுத்தியதை தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆலோசகர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக இந்த பாலியல் தொல்லையை எதிர்கொண்டு வருவதாக மாணவி தெரிவித்ததாக  புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: Annamalai: உள்ளடி வேலை பார்த்த அண்ணாமலை? கடுப்பான அமித் ஷா? தூக்கி அடிக்க ஸ்கெட்ச் - சனாதானம் டாபிக்

தாயின் விளக்கம்:

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, “கடந்த காலங்களில் தனது மகளை அடித்து இருக்கிரேன், திட்டி இருக்கிறேன். ஆனால், பாலியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்கியது இல்லை” என மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், திருமணத்திற்கு பிறகு கணவருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என மட்டுமே பயிற்சி அளித்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக சில தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்: Magalir Urimai Thogai: அடித்தது ஜாக்பாட், விதிகளை தளர்த்திய தமிழக அரசு - யாருக்கெல்லாம் ரூ.1000? உரிமைத்தொகை

காவல்துறை விசாரணை:

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்னும் முழுமையான விசாரணை நடைபெறவில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதேநேரம், அவரின் மூத்த சகோதரியிடம் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் தற்போது வரை உறுதி செய்யப்படாத நிலையில், பெற்ற தாயே மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.