Crime: மேற்கு வங்கத்தில் 10 வயது சிறுமியை முதியவர் ஒருவர் ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்புக்கென்று கடுமையான சட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் ஆங்காங்கே உடல் ரீதியான, மன ரீதியாக தாக்குதல்கள்  தினசரி பெண்கள் மீது நடைபெற்று வருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் மேற்கு வங்கத்தில் நடைபெற்று பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்:


மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்தவர் 68 வயதான முதியவர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். இந்த சிறுமி அதே பகுதியில் 5ம் வகுப்பு படிப்பு வந்திருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் முதியவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளதாக தெரிகிறது.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட முதியவர், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலமாக அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.  அந்த சிறுமியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஒரு மாதமாக இருந்துள்ளது. ஆனால், சிறுமி எப்போதும் ஒரு சோர்வுடனே காணப்பட்டிருந்தார். சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் இருந்துள்ளதாக தெரிகிறது.


10 ரூபாய் கொடுத்து மிரட்டிய முதியவர்:


சிறுமி நடத்தையில் மாற்றம் இருப்பதால், அவரது தாய் கேட்டிருக்கிறார். அதற்கு சிறுமி நடந்ததை எல்லாம் தனது தாயிடம் கூறினார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சிறுமியை ஒரு மாதமாக முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த பிறகு சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் 10 ரூபாய் கொடுத்துள்ளார்.


மேலும், பாலியல் வன்கொடுமை செய்ததைப் பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிடுவேன்" என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இதற்கு  பயந்து சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Sanatan Dharma Row: சனாதன விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர் மோடி.. உதயநிதிக்கு மேலும் நெருக்கடி.. நடந்தது என்ன?


New Labour Laws: 30 நாள்களுக்கு மேல் விடுப்பு எடுக்காத ஊழியர்களுக்கு ஊதியம்.. இதை தெரிஞ்சுக்கோங்க