பங்களாதேஷைச் சேர்ந்த இளம் நடிகை ஷம்சுனாகர் ஸ்மிரிதி. போரி மோனி என்று அழைக்கப்படும் 28 வயதான இவருக்கு பெரிய ரசிகர் வட்டாரம் உண்டு. இன்ஸ்டா புகைப்படம் வெளியிட்டு எப்போதும் ஆக்டீவாக இருக்கும் போரி, ஒரு பேஸ்புக் பதிவு மூலம் அதிர வைத்துள்ளார். பங்களாதேஷில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பேஸ்புக் பதிவு மூலம் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவுக்கு நீதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ள போரி, நான் எங்கே நீதியை கோரமுடியும்? கடந்த 4 நாட்களாக எனக்கு அது கிடைக்கவில்லை. அனைவருமே கதையை கேட்கிறார்கள். அதனை பின் தொடரவில்லை. நான் ஒரு பெண், நான் ஒரு நடிகை, அதற்கெல்லாம் முன்பு நான் ஒரு சராசரி ஆள் தான். என்னால் அமைதியாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். 




தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் தொழிலதிபர் குறித்து மேற்கொண்ட விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் ஊடகத்தில் பேசிய போரி, தொழிலதிபர் நசீர் முகமதுதான் தன்னிடம் அத்துமீறியதாக தெரிவித்துள்ளார். நான்கு தினங்களுக்கு முன்பு தகா போட் க்ளப்பில் நசீர் முகமது தன்னை தாக்கியதாகவும்,பாலியல் வன்கொடுமை  செய்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள நசீர் தகா போட் க்ளப் உறுப்பினர் ஆவார். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நடிகையின் பேஸ்புக் பதிவு  பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில் இந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்


புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!


2015ல் சினிமாத்துறையில் கால்பதித்த போரி, 12க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வெற்றிப்படங்கள் மூலம் அதிகம் அறியப்பட்ட போரி போர்ப்ஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவில்  சிறந்த 100 நட்சத்திரங்கள் பட்டியலில் இடம்பெற்றார்.  




மீ டு புகார்கள், பாலியல் புகார்கள் என நீதி வேண்டி பல நடிகர்கள் தங்களது புகார்களை சோஷியல் மீடியா மூலம் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தின் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை கருவுறச் செய்து ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக  அமைச்சர் மணிகண்டலுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?