ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்த பால்டசர் எங்கோங்கா என்பவரின் (Baltasar Ebang Engonga) நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடோரியல் கினியா. இந்த நாட்டின் முக்கிய உயர் அதிகாரிகளில் ஒருவர் பால்டசர் எங்கோங்கா. அவர் வெவ்வேறு பெண்களுடன் உடலுறவு கொள்ளும் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த பால்டசர் எங்கோங்கா? (Baltasar Ebang Engonga)
ஈக்வடோரியல் கினியா நாட்டின் தேசிய நிதி விசாரணை முகமையின் இயக்குநர் பால்டசர். இவர் தன்னுடைய தோற்றம் காரணமாக ’பெல்லோ’ என்று அழைக்கப்படுகிறார். எங்கொங்கா, மத்திய ஆப்பிரிக்க பொருளாதார மற்றும் பண அமைப்பின் தலைவரான பால்டசர் எங்கொங்கா எட்ஜோவின் மகன் ஆவார்.
உயர் அதிகாரிகளின் மனைவிகளோடும்..
54 வயதான இவர், வெவ்வேறு பெண்களுடன் தன்னுடைய நிதித்துறை அலுவலகத்திலும் வேறு சில இடங்களிலும் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் முக்கிய அதிகாரிகளின் மனைவிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து #BaltasarEbangEngonga என்ற ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள், தொலைதொடர்பு அமைச்சகத்துக்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கியது எப்படி?
எங்கொங்கா சமீபத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கைப்பற்றிய பணத்தை கேமேன் தீவுகளில் உள்ள ரகசியக் கணக்குகளில் பதுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து அவர் அக்டோபர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மலபோவில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் செல்போன், கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்த சில நாட்களில், 400-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.