கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை பகுதியை சேர்ந்தவர் சிவன் வயது ( 33).  இவருக்கு இரண்டு திருமணம் ஆகியுள்ளது. மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் திருவண்ணாமலையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று மதியம் இவர் நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் ஏரிக்கரை பகுதிக்கு இயற்கை உபாதைக்காக ஒதுங்கியுள்ளார். அப்போது அந்த பகுதியில் பெண் ஒருவர் தனியாக ஏரியில் சுல்லி விறகு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் சிவன் தனியாக இருந்த பெண்ணை பார்த்துள்ளார். அதன் பிறகு அங்கு சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த அவர் , அதனை பயன்படுத்தி கொண்டு தனிமையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.


 




இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஓடி வருவதை கண்ட ஆட்டோ ஓட்டுனர் கையில் வைத்திருந்த சின்ன கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதனைத்தொடர்ந்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது தப்பியோடிய ஆட்டோ டிரைவரை அங்கு ஓடிவந்த பொதுமக்கள் துரத்தி சென்றனர். இதற்கிடையில் ஆட்டோவில் தப்பிய சிவன் திடீரென ஆட்டோவில் பெட்ரோல் தீர்ந்து விடவே சிவன் ஆட்டோவை சிறிது தூரம் தள்ளிக் கொண்டே சென்றுள்ளார். பின்னர்,ஆட்டோவில் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றிக் கொண்டு தப்பித்து செல்ல முயற்சித்துள்ளார்.          


 




 


அப்போது ஆட்டோ ஓட்டுனரை சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் விரட்டி சென்ற பொதுமக்கள் தேனி மலைப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சிவத்தை மடக்கிப் பிடித்தனர். அப்போது சிவன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் சிவனை திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண