மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், இதுவரை 25 நபர்கள் குற்றஞ்சட்டப்பட்டவர்களாக உள்ளனர். 


மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டவர்களுக்கு எதிராக உள்ள குண்டர் சட்ட வழக்கையும் எதிர்த்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், “ ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு கை மாற்றப்பட்டதாக , அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.


இதையடுத்து, வெடிகுண்டு எப்படி உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது, எப்படி என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, வெடிகுண்டு தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


எதற்கு ,உயர்நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு வரப்பட்டது; யார் மீதேனும் தாக்குதல் நடத்த திட்டமா? என்றும் கேள்வியை பலரும் முன்வைத்து வருகின்றனர். 


இந்நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளே, வெடிகுண்டு கொண்டுவரப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.